வீட்டுக்கு வந்ததாலதான் மதிச்சேன்! சந்தானம் மீது செம கடுப்பில் விவேக்!

கவுண்டமணியை வடிவேலு மதிக்கவில்லை. வடிவேலுவை சூரி மதிக்கவில்லை. இப்படி முன்னோர்களின் புகழை பின்னவர்கள் சட்டை பண்ணுவதில்லை. அந்த பளக்க வளக்கத்தை இம்மியளவும் மீறவில்லை சந்தானம். ஏன் எப்படி?

தமிழ்சினிமாவில் சாதித்த காமெடியன்கள் லிஸ்ட்டில் விவேக்குக்கு அறுபதடி சிலை வைக்கிற அளவுக்கு புகழும் பவுசும் இருக்கிறது. ‘வரவர காமெடி வவுத்தெரிச்சலா போச்சே’ என்கிற ஆத்திரத்தில், ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்’ என்று ஒதுங்கியே வாழ ஆரம்பித்திருந்தார் அவர். ஆனால் தினந்தோறும் மரம் நடுவது. பள்ளிகளுக்கு விசிட் அடித்து மாணவர்களை மோட்டிவேட் பண்ணுவது என்று பிசியாக இருக்க தவறவில்லை.

இந்த நேரத்தில்தான் சந்தானம் போன் அடித்தாராம். ‘அண்ணே… உங்களை வீட்ல வந்து பார்க்கணும். அப்பாயின்ட்மென்ட் வேணும்’ என்று. ‘அதுக்கென்ன தம்பி. எப்ப வேணா வாங்க’ என்று சம்மதித்தாராம் விவேக். வந்தவர், ‘அண்ணே… நீங்க என் படத்தில் நடிக்கணும்’ என்று கேட்க, ‘எனக்கு பிரச்சனையில்ல. ஆனால் போஸ்டர்ல ஸ்டாம்ப் சைசுக்கு போட்டோ போடுறது. அப்புறம் தானா வந்து சிக்குனாண்டா என்று நினைத்துக் கொண்டு, வசனங்களில் அலட்சியப்படுத்துவது போன்ற இம்சைகள் இருக்கக் கூடாது. உரிய மரியாதை தந்தால் ஓ.கே’ என்றாராம் விவேக்.

அண்ணே… உங்களுக்கு தரவேண்டிய மரியாதையில் துளி குறையாது என்று சொல்லிதான் நடிக்க வைத்திருக்கிறார் சந்தானம். இப்போ?

அதான் வேலை முடிஞ்சுதே? அவ்ளோ பெரிய கலைஞரான விவேக்குக்கு போஸ்டரில் ஒதுக்கப்படும் இடம், ரோபோ சங்கரை விட சின்னதாக இருக்கிறது. படத்தில் விவேக் நடித்த பல காட்சிகள் சப்தமில்லாமல் நறுக்கப்பட்டு விட்டதாம். விஷயத்தை கேள்விப்பட்ட விவேக், ‘அப்பவே தெரியும். இப்படியெல்லாம் நடக்கும்னு. நல்லாயிருந்து போவட்டும்’ என்கிறாராம்.

சாலிகிராமம் வந்தால் கூட, விவேக் வீட்டு வழியா போயிராதீங்க சாண்டல்! ஹீட் ஓவராயிருக்கு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிற நடிகைகளுக்கு நயன்தாராதான் ரோல் மாடல்! புகழும் சிவகார்த்திகேயன்

வேலைக்காரன் படம், தமிழகத்தில் ரிலீஸ் ஆகிற அதே நாளில் கேரளாவிலும் வெளியாகிறது. அதற்கு வசதியாக படத்தின் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் பஹத்பாசில். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்காக கேரளா...

Close