அடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்?

‘காலி லேண்டா இருந்தா கம்பும் விதைக்கலாம். சோளத்தையும் சொருகலாம். ஆனால் ஏற்கனவே விளைஞ்சு நிக்கிற நெல் வயலில், வேறு எதை போட்டாலும் சிக்கலாச்சே விவேக்?’ இப்படி அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரையும் புலம்ப விட்டுவிட்டார் ஸ்மால் கலைவாணர்! அவர் பேசியது நயன்தாராவை பற்றி.

‘எழுமின்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஆர்.கே.வி ஸ்டூடியோவில் நடந்தது. சிம்பு, விஷால், கார்த்தி ஆகிய மூன்று பெரும் ஹீரோக்களும் விவேக்குக்காக அங்கு வந்திருக்க… உற்சாக மூடிலிருந்தார் விவேக். இன்று தமிழ்சினிமா இருக்கிற இருப்பை பற்றி பேச வந்தவர், “நயன்தாராவை யோகி பாபு லவ் பண்றாரு. ஒரு காலத்தில் அந்த நயன்தாரா சிம்புவோட இருந்தவர்தான்” என்று கூற… பலருக்கும் பேரதிர்ச்சி. “நான் மன்மதன், வல்லவன் படத்தில் சேர்ந்து நடிச்சதை பற்றிதான் சொன்னேன். அதை விவகாரமா எடுத்துக்காதீங்க” என்று அவர் ஜோக்காக கூறினாலும், பலரும் மறந்து போன நயன்தாரா சிம்பு விவகாரத்தை இங்கு இழுக்க வேண்டுமா என்பதுதான் பலரது கேள்வியாக இருந்தது.

இந்த விவேக் பேச்சுக்கு மேடையில் அமர்ந்திருந்த சிம்பு, சற்று திகைத்தாலும் சமாளித்துக் கொண்டார். யோகி பாபுவின் முயற்சிக்கு, “நயன்தாரா கொடுக்கிற ரீயாக்ஷனை பார்த்தால், அந்த காதலுக்கு ஓகே சொல்லிடற மாதிரிதான் இருக்கு” என்று விவேக் சொன்னதெல்லாம் டூ மச்… த்ரி மச்.

விக்னேஷ்சிவனும் நயன்தாராவும் காதலிக்க துவங்கி பல வருடங்கள் ஓடிவிட்டன. கிட்டதட்ட ஒரு தம்பதி போலவே வெளிநாடுகளுக்கு செல்வதும், ஏதாவது முக்கிய நிகழ்ச்சி என்றால் சேர்ந்தே வருவதும் இவ்விருவருக்கும் வாடிக்கையாகிவிட்டது. நயன்தாராவின் கடைசி காதல் இதுதான் என்ற முடிவுக்கு நாடே வந்துவிட்ட நேரத்தில், விவேக்கின் இந்த பேச்சு சுவாரஸ்யமானதுதான் என்றாலும், நியாயமானதா?

அதை மக்களும் சினிமா ரசிகர்களும்தான் முடிவு செய்ய வேண்டும்.

Read previous post:
ஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா? – ‘கொதிக்கிறார் ‘நார்வே’ வசீகரன்!

https://www.youtube.com/watch?v=mTBKsivdk2c

Close