அனிருத்துக்கும் நயன்தாராவுக்கும் என்ன கனெக்ஷன்?

நேற்று தானா சேர்ந்த கூட்டம் படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடந்தது. அங்குதான் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார் தொகுப்பாளினி அஞ்சனா. விக்னேஷ்சிவன் அனிருத்தாக மாறி பதில் சொல்வது. அனிருத் விக்னேஷ் சிவனாக மாறி பதில் சொல்வது. இதுதான் கான்சப்ட்.

விக்னேஷ் சிவனிடம், எப்ப கல்யாணம் என்றார் அஞ்சனா. அவர்தான் இப்போது அனிருத் ஆச்சே? வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

அதற்கப்புறம் அனிருத்திடம், உங்களுக்கு எப்போது, யாருடன் திருமணம் என்ற கேள்விக்கு அனிருத் ‘கல்யாணமா அப்போ எங்களுக்கு கல்யாணம் நடக்கலையா?‘ எங்று கேட்க, ஆடிட்டோரியமே அதிர்ந்தது. பிடித்த நடிகை நயன்தாரா என்று அனிருத் சொன்னதையும் விக்னேஷ் சிவனே சொன்னதாக எண்ணி சந்தோஷப்பட்டது ரசிகர் பட்டாளம்.

நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியதாவது-

இயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. நான் படத்தில் பிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள் அதற்கு முழு காரணம் விக்னேஷ் தான். எனக்கு முன்பை போல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார். நானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி கடுமையாக உழைத்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். என்னை போன்ற ஒருவனே வாழ்கையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடியும் என்றால். கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பலவிஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும் , என்ன நடந்தாலும் , அன்பாவே இருப்போம் என்று ரசிகர்களிடம் கூறினார் சூர்யா.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினியுடன் 3 வது வாய்ப்பு! தன் வினையால் இழந்த பா.ரஞ்சித்!

முதல்வன் படம் தன்னை தேடி வந்தபோது, ‘அடர்த்தியா இருக்கு. இப்போதைக்கு வேணாம்’ என்று ஒதுங்கிக் கொண்டார் ரஜினி. ஒரு நாள் முதல்வர்... பட படா... திடு திடா...

Close