ரஜினியுடன் 3 வது வாய்ப்பு! தன் வினையால் இழந்த பா.ரஞ்சித்!
முதல்வன் படம் தன்னை தேடி வந்தபோது, ‘அடர்த்தியா இருக்கு. இப்போதைக்கு வேணாம்’ என்று ஒதுங்கிக் கொண்டார் ரஜினி. ஒரு நாள் முதல்வர்… பட படா… திடு திடா ஆக்ஷன். எப்படியிருந்திருக்கும்? அதுவும் ரஜினியின் அந்த கால இமேஜுக்கு? கண்ணுக்கு தெரிந்தே கோட்டை விட்டார். இன்று காலம் அழைக்கிறது, ‘தலைவா வா. தலைமையேற்க வா’ என்று. இந்த நேரத்தில் திடுதிப்பான ஒரு அரசியல் படம் கிடைத்தால்?
காக்கா முட்டை மணிகண்டனை அணுகும் முன்பே பா.ரஞ்சித்தைதான் கேட்டாராம் ரஜினி. மற்ற இயக்குனர்களுடன் பணியாற்றுவதை விட ரஞ்சித்தோடு பயணிப்பது ரஜினிக்கு எளிது. வெறும் முகம் மட்டும் போதும். மற்றதெல்லாம் வேறு யாராவது டூப்பை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்கிற அளவுக்கு சுதந்திரம் கொடுப்பவர்.
‘ஒரு விறுவிறுப்பான அரசியல் ஆக்ஷன் வேணும். இருக்கா? இருந்தா கட்சி ஆரம்பிக்கறதுக்குள்ள அறிவிப்பை கொடுத்துடலாம்’. -இது ரஜினி. வழக்கம் போல, தன் கொள்கை கோட்பாடு அஸ்திரத்தை குழைத்தடித்து ஒரு கதையை சொன்னாராம் ரஞ்சித். வெலவெலத்து போய்விட்டார் ரஜினி. மறுபடியுமா? என்று கவிழ்ந்து குப்புற விழுந்தவர்தான். சட்டென தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு, பழைய முதல்வன் வசமே தன்னை ஒப்புக் கொடுத்திருக்கிறார்.
‘இந்தியன் 2 பண்ணும்போதே, முதல்வன் 2 பற்றியும் யோசிங்க. சட்டுன்னு போயிடலாம்’ என்று ரஜினி சொல்ல, ஷங்கரின் மண்டை இப்போது முதல்வனையும் அலசி காயப் போட்டுக் கொண்டிருக்கிறது.
அப்ப மணிகண்டன்? அது இப்போதைக்கு இல்லையாம்!
100% RUMOUR.
THIS WEBSITE IS RAJINI HATERS WEBSITE.
ALL TAMILIANS, AVOID THIS WEBSITE.
Rajini Hater … so what !!! ??