வரலேன்னு சொன்னா வர்றோம்னு அர்த்தம்! விஜய் எஸ்.ஏ.சி அரசியலில் புது ரூட்!
இனிமே அப்பா ரோல்தான்… என்கிற நிலைமை வந்தால் ஹீரோக்கள் ஒதுங்குகிற ஒரே இடம் அரசியல்தான்! கங்கை அமரனுக்கும், விஜயகுமாருக்கும் கூட திண்ணையில் இடம் கொடுக்கும் அரசியலுக்கு, இவர்கள் வரிசையில் வரப்போகும் இன்னும் பலருக்காக பரிதாபப்பட நேரமா இருக்காது? பல்வேறு ரிட்டையர் ஹீரோக்களுக்கு போர்வையை விரித்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறது பா.ஜ.க.
அப்படியே விஜய் வந்தா நல்லாயிருக்கும். அஜீத் வந்தா நல்லாயிருக்கும் என்று அந்தப்பக்கமும் நல்ல வண்ணமயமான போர்வையை விரித்துக் காத்திருக்கிறது அக்கட்சி. இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவாவது ஒரு தனிக்கட்சி ஆரம்பிக்கணும்ப்பா என்கிற அளவுக்கு படு சோகமாகி வருகிறார்கள் இளம் நடிகர்கள். இப்படியொரு பரபர சூழ்நிலையில்தான், விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்று கூறி கடுப்ஸ் ஏத்தினார் எஸ்.ஏ.சி.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த பேச்சு பெரும் அதிருப்தியை விளைவிக்க, “என்ன தலைவா… அப்பா இப்படி சொல்லிட்டாரு?” என்று விஜய்யின் போனுக்கு வந்து விலாவாரியாக ஒப்பாரி வைத்தார்களாம் மாவட்ட தலைமை பொறுப்பாளர்கள். அப்படி பரபரப்பாக விசாரித்தவர்களுக்கு தரப்பட்ட பதில்தான் இந்த செய்தியின் சிறப்பாம்சம்!
ஒரு திரியை கொளுத்திப் போடுவது. ரசிகர்களின் ரீயாக்ஷன் எப்படியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது. அதன் வீரியத்தை பொறுத்து கட்சியை இப்போதே துவங்குவதா? அல்லது பொதுத் தேர்தல் வரும் நேரத்தில் துவங்குவதா? என்ற ‘பல்ஸ்’ பார்க்கதான் இப்படியொரு அஸ்திரத்தை ஏவிப் பார்த்தாராம் அவர்.
நமக்குக் கிடைத்த கடைசி தகவல்படி, பதறியடித்துக் கொண்டு பேசிய மன்றத்தின் கண்மணிகளுக்கு “டோன்ட் வொர்ரி. அப்பா பேசுனதை மனசுல வச்சுக்காதீங்க. எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு” என்று மட்டும் சொல்லப்பட்டதாம் விஜய் தரப்பிலிருந்து.
ஆரம்பிக்காத படத்துக்கு க்ளைமாக்ஸ் எப்போன்னு தெரிஞ்சுக்கறதுலதான் எவ்வளவு ஆர்வம்யா ஜனங்களுக்கு?
https://www.youtube.com/watch?v=161bLsVLjrM&feature=youtu.be
மக்கள் செருப்படி கொடுக்க தயார்