ஸ்ருதிஹாசனுக்கு என்னாவொரு தைரியம்?

மார்கெட் இருக்கும்போதே எனக்கு சினிமா வேணாம் என்று முடிவெடுப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். கமல் மகள் ஸ்ருதிஹாசனுக்கும் அப்படியொரு தைரியம் வந்திருக்கிறது. இதற்கு பின்னாலிருப்பது காதலா, விரக்தியா, அறியாமையா, அலுப்பா என்பது பற்றியெல்லாம் பேசினால், அரை நாள் முழுசாக போய்விடும். எந்த நேரத்தில் ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து விலகினாரோ, அப்பவே சினிமா இவர் கையை விட்டுப் போய்விட்டது.

இப்போதும் ஸ்ருதியை தேடிப்போய் கால்ஷீட் கேட்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியாத நிலைதான் நீடிக்கிறது. (அவர் வெளியுலகத்திலிருந்து விலகியிருப்பதே வேறு ஒரு முக்கியமான சிக்கலால்தான் என்றும் தூவி விடுகிறார்கள் இங்கே, என்னவா இருக்கும்?)

மின்னலே வந்து ஜன்னலை மூடுன மாதிரி இதென்ன சினிமாவுக்கு வந்த சோதனை!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மோடியை மீட் பண்ணுங்க! வியூகத்திற்குள் விஜய்?

Close