மோடியை மீட் பண்ணுங்க! வியூகத்திற்குள் விஜய்?

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில் கூட சினிமாவையும் சினிமாக்காரர்களையும் கண்டு கொள்ளவில்லை என்றால், ஜிகினா பளபளப்பால் சிறிதும் லாபமில்லை என்று நினைத்திருக்கலாம். காங்கிரஸ், பா.ஜ.க இவ்விரு கட்சிகளும் ஆன்லைன் திருட்டு சம்பந்தமாகவும், அதை தடுக்கும் முறைகள் பற்றியும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் இருக்கிற சினிமா பிரபலங்களை ஒன்று திரட்டி அவர்களுடன் கலந்துரையாடல் செய்யப் போகிறாராம் பிரதமர் மோடி. இதற்காக சென்னையில் வலைவீசிக் கொண்டிருக்கிறார்கள். விஜய்க்கு கூட வலை வீசப்பட்டதாம். அவர் சிக்கவில்லை. ஆனால் தயாரிப்பாளர் தாணு இந்த மீட்டிங்கில் கலந்து கொள்வதாக முடிவாகியிருக்கிறது.

இன்னும் யாரெல்லாம் காவித் துண்டுக்கு ஆசைப்படப் போறீங்க?

Read previous post:
கட்சி மாறிய சாந்தனு! இப்போது அவர் அஜீத் பக்கம்!

Close