பிரதமர் என்ன செய்யணும்? அட… ரஜினி பேச ஆரம்பிச்சுட்டாரே?
ரஜினியும் கமலும் கலந்து கொண்டதாலேயே தமிழ் திரையுலகம் நடத்திய மவுன அறவழி போராட்டம் பேசு பொருள் ஆகிவிட்டது. மேடையில் இருவரும் அருகருகில் அமர்ந்திருந்த காரணத்தால் நிறைய பேசிக் கொண்டார்கள். அதற்கு சற்று முன்பாகதான் வீட்டை விட்டு வெளியே கிளம்பிய ரஜினியிடம் அந்த கேள்வியை கேட்டார்கள் செய்தியாளர்கள்.
ஆன்மீக அரசியல்தான் ரஜினியின் முடிவென்றால், அதை எதிர்ப்பேன் என்று கமல் கூறியிருக்கிறாரே?
இதற்கு பதிலளித்த ரஜினி, நான் கமல்ஹாசனை எதிர்க்க மாட்டேன். அவர் என்னுடைய எதிரியே கிடையாது. என்னுடைய எதிரி, வேலையில்லா திண்டாட்டம், ஏழ்மை, விவசாயிகளின் கண்ணீர் என்று அடுக்கிக் கொண்டே போனார் ரஜினி.
அப்படியொரு கேள்வி பதில் நடந்ததையே அறிந்திருக்கவில்லை கமல். முன்னதாக மேடைக்கு வந்த ரஜினி, கமல்ஹாசனின் தோள் தழுவிக் கொண்டார். அதற்கப்புறம் அவர் தழுவிக் கொண்டது இளையராஜாவை. அதே மேடையில் இருந்த பழம்பெரும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கால்களையும் தொட்டு வணங்கினார் ரஜினி.
சரி… மற்ற முக்கிய விஷயங்கள் பற்றி ரஜினியின் கருத்தென்ன? அவரது பேட்டியின் ‘சுருக்’ இதுதான்.
எல்லோருடைய கோரிக்கையும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டியது என்பதுதான்! இதை செய்ய மறுத்தால் மத்திய அரசு மக்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டியதாகி விடும். காலத்தை மத்திய அரசு வீணாக்கிக்கொண்டிருக்கிறது. உடனடியாக வாரியம் அமைக்காவிட்டால் ஒட்டு மொத்த தமிழர்களுடைய கோபத்தை சந்திக்கவேண்டியதாகிவிடும்.
ஸ்டெர்லைட் ஆலையினால் எவ்வளவு லாபம் கிடைப்பதாக இருந்தாலும் மக்களுக்கு நன்மையில்லை என்றால் தடை செய்து விடவேண்டும்.
ஐபிஎல் லில் விளையாடும் சென்னை கிரிக்கெட் அணி வீரர்கள் கருப்பு சின்னம் அணிந்து விளையாடலாம். பார்க்க போகிற இளைஞர்கள் கருப்பு துணி அணிந்து கொண்டு போகலாம்.
தம்பி கொஞ்சம் புரிந்து கொள். தலைவர் ரஜினி அவர்கள் பேசினாலும் செய்தி பேசாவிட்டாலும் செய்தி. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை போல மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் யாரும் அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை சுற்றி தான் தமிழக அரசியலே இயங்கி வருகிறது. எந்த பிரச்சனை என்றாலும், தமிழக மக்கள் ஆவலோடு எதிர்ப்பார்ப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் ஆதரவைத்தான். அனைத்து தமிழக மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன், தலைவர் ரஜினி அவர்கள் தமிழக முதல்வர் ஆவது உறுதி.
ரஜினி தேவையான போது பேசிட்டு தான் இருக்காரு.
மற்றவங்க தொண்டை வத்த கத்தியும் சாதிக்க முடியாததை 5 நிமிட பேட்டிகளில் சாதித்து விடுகிறார்.
மற்றவர்கள் சுத்தி வளைச்சு தொடுவதை, நேராக கூறுவதன் மூலமும் நேர்மையாக பொறுப்புடனும் சொல்வதன் மூலம் அனைவர் கவனத்தையும் பெறுகிறார்.
மற்றவர்களும் மதித்து பதில் அளிக்கிறார்கள்.
என்ன செய்வது.. சும்மாவது கத்திட்டே இருந்தால் தான் அக்கறை இருப்பதாக நீங்கள் உட்பட அனைவரும் நம்புகிறீர்கள் அல்லது நடிக்கிறீர்கள்.