பேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்!

அரசியல் ரீதியாக ஆயிரம் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக ‘நாளைக்கே நீ மண்டைய போட்ருவ…’ என்று பேசுகிறவர்களை எதை கொண்டு அடக்குவது? ‘நீ எறிந்த செங்கல்லை உன் மண்டைக்கே திருப்புறேன் பாரு…’ என்று களத்தில் இறங்கி செவுளை பிளந்துவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள்.

விஷயம் இதுதான். சில தினங்களுக்கு முன் ஒரு மேடையில் பேசிய ஆர்.சுந்தர்ராஜன், தான் ஒரு காலத்தில் பெரிய இயக்குனர், தற்போதும் படைப்பாளிகள் மதிக்கக் கூடிய இடத்திலிருக்கிறோம் என்பதையெல்லாம் மறந்துவிட்டு, ரஜினி குறித்து தாறுமாறாக பேசிக் கொண்டிருந்தார். ‘உன் பாடி கண்டிஷன் எனக்குதான் தெரியும். ஒரு கூட்டத்துல பேசிட்டு இன்னொரு கூட்டத்துக்கு போறதுக்குள்ள செத்துப் போயிருவே…’ என்றெல்லாம் தரம் தாழ்ந்து பேசியிருந்தார். இந்த காணொளி யு ட்யூபில் பரவ ஆரம்பித்ததும் ‘இந்தாளுக்கு எதுக்கு இப்படியொரு கீழ்த்தரமான பேச்சு’ என்று பேரதிர்ச்சிக்கு ஆளானார்கள் மக்கள்.

ரஜினி மீது கருத்து ரீதியாக உடன்பாடு இல்லாதவர்களையே முகம் சுளிக்க வைத்த இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவார்கள்? அதைதான் நேற்று அனுபவித்தார் மனுஷன். ஆர்.சுந்தர்ராஜனுக்கு திடீர் மாரடைப்பு. காலமானார் என்று சோஷியல் மீடியாவில் நம்பும்படி ட்விட் போட்டார்கள். எங்கோ உறவினர் வீட்டு விசேஷத்துக்கு போயிருந்த ஆர்.சு வுக்கு நாலாபுறத்திலிருந்தும் போன். நான் நல்லாதான்ப்பா இருக்கேன் என்று சொல்லி சொல்லியே தொண்டை காய்ந்து போனார்.

இவரைப்போலவே பேசிக் கொண்டிருக்கிறார் நடிகர் மன்சூரலிகான். ஒவ்வொரு மனுஷனுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்கிற வேலை மேலேயிருக்கிற அவன் கையிலிருக்கிறது. யாருக்கு எந்த நேரத்தில் டிக்கெட் என்பதை புரிந்து கொள்கிற ஆற்றல் ஆர்.சு, மன்சூரு போன்ற சாதாரண மங்குனிகளுக்கு இல்லவே இல்லை.

இது புரியாமல் பினாத்தி வரும் இவர்களுக்கு இப்படிப்பட்ட ட்ரீட்மென்டுகள் தேவைதான்!

Read previous post:
…ந்தா பாரு கூட்டத்த! மிரட்டும் விஜய்! மிரளுமா பா.ஜ.க?

Close