…ந்தா பாரு கூட்டத்த! மிரட்டும் விஜய்! மிரளுமா பா.ஜ.க?

கருப்பசாமி தெய்வத்துக்கு கன்னமெல்லாம் மீசை… கைய வைக்க ஆசைப்பட்டா கலவரம்தான் பூசை! இந்த புதுமொழிக்கு அர்த்தம் தெரிய வேண்டுமா? அண்மையில் விஜய்யை சீண்டிய பி.ஜே.பி யின் நிலைமையை கொஞ்சம் யோசித்துக் கொள்ளுங்கள், புரியும்!

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு, தன் தொடையை தானே கடித்துக் கொண்ட நிலைமையாகிவிட்டது சுச்சுவேஷன். சும்மா கிடந்த விஜய்யை, வாய்யா வம்புக்கு என்று சீண்டி விட்டது வருமான வரித்துறையின் ரெய்டு. இதன் பின்னணியில் பி.ஜே.பி யின் பங்கு இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதத்தில் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் ஷுட்டிங்கில் போய் கலவரம் செய்ய முயன்றார்கள் பத்துக்கும் குறைவான பி.ஜே.பி யினர். கூட்டி கழித்து பார்த்தாலும் தெருவுக்கு நாலு பி.ஜே.பி யினர் தேறப்போவதில்லை. அப்புறம் எதற்கு ஆர்ப்பாட்டமும், கூப்பாட்டமும்?

விஜய்க்கு கிடுக்கிப்பிடி போட்ட வருமான வரித்துறை, அவருக்கு தந்த அவமானங்கள் அரசியல் ரீதியாக அலசப்பட்டு வருகிற இந்த நேரத்தில், அவகாசமே கொடுக்கப்படாமல் ‘இன்னைக்கே ஆஜராகணும்’ என்று இன்னொரு நோட்டீஸ் வேறு. நெய்வேலியில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய் எப்படி இன்னைக்கே ஆஜராவார்? போகட்டும்… ஏனிந்த தொடர் கெடுபிடிகள்.

பையன் அடங்கிடுவார்னு நினைச்சுதான் ரெய்டு விட்டோம். ஆனால் முண்டுறாரே… என்று எண்ண வைத்திருக்கிறது விஜய்யின் அடுத்தடுத்த செயல்கள். அவரைக் காண திருவிழா போல கூடிய ரசிகர்களை அடக்க முடியாமல் திணறுகிறது போலீஸ். தலைவா… உனக்கு ஒண்ணுன்னா விட மாட்டோம் என்று கூடி வரும் ரசிகர்களின் கூட்டத்தால் நெய்வேலி ஸ்தம்பித்துக் கிடக்கிறது.

இந்த கூட்டத்தை இன்னும் ஆர்ப்பரிக்க விட்டுவிட்டார் விஜய். நேற்று தன்னை காணத் திரண்ட ரசிகர்கள் முன்பு தோன்றிய விஜய், ஒரு வேனில் ஏறி அத்ததனை கூட்டத்தோடும் சேர்த்து ஒரு செல்ஃபி எடுத்தார். இந்த உற்சாக நேரத்தை அப்படியே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ஏற்றியிருக்கிறார்கள் ரசிகர்கள்.

ரஜினியின் தரிசனம் தருகிற நேரம்தான் தமிழ்நாட்டின் எழுச்சி நேரம் என்று நம்பிக் கொண்டிருந்த பி.ஜே.பி. க்கு அதைவிட எழுச்சியாய் இன்னொருவன் கிளம்புகிறான் என்றால் பி.பி.ஏறாமல் என்ன செய்யும்?

இன்னைக்கே ஆஜராவணும்… -நோட்டீஸ்க்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஒரே அமுக்கு! தப்பிப்பாரா விஜய்?

Close