சைல்டு லேபர் சட்டமெல்லாம் எங்க போச்சுடா? சங்கடப்படுத்தும் சங்கு சக்கரம்!

பிராணிகள் சும்மா இருந்தால் கூட, பிராணிகளுக்காக ‘குலைக்கும்’ அமைப்புகள் சும்மாயிருப்பதில்லை. சினிமாவில் எங்காவது ஒரு எலி ஓடினால் கூட, அது கண்ணுக்கு தெரிந்துவிட்டால், ‘ஐயய்யோ எலிக்கு என்னாச்சோ?’ என்று பதறுவார்கள். சம்பந்தப்பட்ட எலியை பிடித்து பிளட் டெஸ்ட், பி.பி டெஸ்ட்., ஈசிஜி எல்லாம் எடுக்கச் சொல்லி ரிசல்ட் கேட்டு மிரட்டுவார்கள். ‘நீங்கள்லாம் மாடு முட்டிதாண்டா சாவீங்க’ என்று பாதிக்கப்பட்ட சினிமாக்காரன் பதற பதற அழுத கதைகளெல்லாம் கோடம்பாக்கத்தில் உண்டு.

இப்படி பிராணிகளுக்காக குரல் கொடுப்பவர்கள் ஏன் சினிமாவில் நடிக்கும் குழந்தைகளுக்காக குரல் கொடுப்பதில்லை? இத்தனைக்கும் சைல்ட் லேபர்களை ஒழிப்பதற்கான அமைப்பும் இங்கு இல்லாமல் இல்லை.

இன்னும் சில தினங்களில் திரைக்கு வரப்போகும் ‘சங்கு சக்கரம்’ என்ற படத்தில் சுமார் 20 குழந்தைகள் நடித்திருக்கிறார்கள். இத்தனை பேரும் ஸ்கூலுக்கு மட்டம் போட்டுவிட்டு நடித்தவர்கள். அதுமட்டுமல்ல… நாளைக்கு பரிட்சையை வைத்துக் கொண்டு இன்று ஷுட்டிங்குக்கு வந்த குழந்தைகளும் உண்டு. சமீபத்தில் நடந்த இப்படத்தின் பிரஸ்மீட்டில் கூட, நண்டும் சுண்டுமாக வாண்டுகளை மேடையேற்றி அவர்களை விட்டே பேச வைத்தார்கள். அதில் ஒரு குட்டிச்செல்லம், பியூச்சர்ல நான் பெரிய ஆக்ட்ரஸ் ஆகணும் என்று சொன்னது தனி கதை.

நைட் ஷுட்டிங்கில் வதைப்பது. அவர்களை கயிறு கட்டி மேலே தொங்க விடுவது. (ஏனென்றால் அது பேய்ப்படம்) என்று குழந்தைகள் மீது அத்தனை வன்முறையையும் காட்டியிருக்கிறார் இயக்குனர் மாரீசன்.

பொல்லாத லேபர் ஆபிசருங்கள்லாம் ஓட்டலில் போய் தண்ணி சப்ளை பண்ணுற பசங்களைதான் மிரட்டுவாய்ங்க போலிருக்கு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சங்குச்சக்கரம் படத்திற்காக 20 நாட்கள் அந்தரத்தில் தொங்கிய ஹீரோயின்..!

‘மை டியர் குட்டிச்சாத்தான்’ பாணியில் குழந்தைகளுக்கான ஹாரர் த்ரில்லர் ‘சங்கு சக்கரம்’..! குழந்தைகளை மையப்படுத்தி வெளியான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’, ராஜா சின்ன ரோஜா’, ‘அஞ்சலி’ ஆகிய...

Close