கவுதம் மேனனை டார்ச்சர் செய்தது சூர்யாவா? தனுஷா? அஜீத்தா?

ஒரு படைப்பாளி முதலாளி ஆகும்போதெல்லாம் மண்டைக்குள் மிளகாய் சாம்பார் கொதிக்க ஆரம்பித்துவிடுகிறது. அதற்கு கவுதம் மேனன் மட்டும் விதிவிலக்கல்லவே? அச்சம் என்பது மடமையடா பத்திரிகையாளர் சந்திப்பில் அவரது டோர்ன் மற்றும் பாடி லாங்குவேஜில் அநியாயத்துக்கு ஆத்திரம்! “பிரஸ்னா என்ன வேணா கேட்பீங்க. நான் பதில் சொல்லணுமா?” என்கிற எரிச்சல் இருந்தது அதில்!

“உங்க படத்துல வர்ற கதையும் காட்சியமைப்புகளும் ஒரே மாதிரியா இருக்கே?” என்றார் ஒரு நிருபர். பட்டென்று டென்ஷன் ஆன கவுதம், “எனக்கு தெரிஞ்சது அவ்ளோதான். வேணும்னா உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லிக் கொடுங்க. நான் எடுக்க ட்ரை பண்றேன்” என்றார். அதோடு விட்டாரா… “நல்லா ஃபுல்லா தண்ணியடிச்சுட்டு என் படத்துக்கு வந்தால் கூட, ரெண்டு சீன் பார்த்துட்டு இது கவுதம் மேனன் படம்னு சொல்லணும். அது போதும் எனக்கு” என்றார்.

அதற்கப்புறம் அவர் கொளுத்திப் போட்டுவிட்டு போனதுதான் இப்போது பற்றிக் கொண்டு எரிகிறது. “சிம்பு முழுக் கதையையும் சொல்லுங்க என்று மத்த ஹீரோக்கள் மாதிரி என்னை டார்ச்சர் செய்ய மாட்டார். கொஞ்சம் கதை சொன்னால் போதும். மிச்சத்தை அவரே பிக்கப் பண்ணிப்பார்” என்று சொல்ல, “உங்களை டார்ச்சர் பண்ணிய அந்த மற்ற ஹீரோக்கள் யார்?” என்று ஸ்பாட்டிலேயே கேள்வி எழுப்பட்டது.

“நான் அவங்க கூட திரும்பவும் படம் பண்ணணும்னு ஆசைப்படுறேன். அதனால் இந்த கேள்வியை தொடர வேண்டாம்” என்றார் கவுதம்.

அவர் விட்டாலும் ஊர் விட்டால்தானே? அந்த ஹீரோ யாராக இருக்கும் என்ற விவாதம் தொடங்கிவிட்டது. சூர்யா இவரது கதை பிடிக்கவில்லை என்று ஓப்பனாகவே டிக்ளேர் செய்திருந்தார். அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ பட சமயத்தில் க்ளைமாக்சை கடைசி வரை அவரிடம் சொல்லாமல் தவிர்த்தார் கவுதம். அதை சொன்னால்தான் ஷுட்டிங் என்று இழுபறியே நடந்தது. இப்போது ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் கதையை முழுசா சொல்லுங்க என்று பிரச்சனை செய்கிறாராம் அப்படத்தின் ஹீரோ தனுஷ்.

ஆகமொத்தம், தவறு மேற்படி ஹீரோக்களான மூவர் மீதும் இல்லை! கவுதம் மேனனின் இந்த கோபத்தை பார்த்து உலகம் பல் செட்டு வச்சு சிரிக்குதே என்ன பண்றது?

To listen Audio Click Below:-

https://youtu.be/OKfXKi-B4LY

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தடுக்கி விட்ட தவ்சன்! தள்ளிப் போறான் குமாரு!

‘நாட்ல பணப்புழக்கம் அவ்ளோ நல்லாவா இருக்கு?’ என்று வியக்கிற அளவுக்கு போய் விட்டது கடந்த ரெண்டு நாட்களின் நிலைமை. ஐநூறு ரூபாய் தாள்களை கொத்தாக வைத்துக் கொண்டு...

Close