நெருக்கடியா? ஹோம்சிக்கா? சென்னைக்கே திரும்பிய அஜீத்!

முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுப்பது சிங்கத்தின் கூண்டுக்குள் போய் சிக்கன் பீஸ் சாப்பிடுவது போல சிரமமான விஷயம். ஒரு வரி வசனத்தை கூட சொந்தமாக வைக்க முடியாது. இப்படி வச்சா அப்படி எடுத்துக்குவாங்களோ, அப்படி வச்சா இப்படி எடுத்துக்குவாங்களோ என்று டவுட்டை கிளப்பும் ஹீரோக்கள், பேசாம இப்படி வைங்களேன் என்று கருத்து சொல்வார்கள். எழுதிய வசனங்களையெல்லாம் இப்படி புழுதியிலே போட்டு புரட்றாங்களே… என்கிற கவலையோடுதான் நாட்களை நகர்த்துகிறார்கள் இயக்குனர்கள். இதில் அஜீத் என்ன? விஜய் என்ன? இரண்டு குதிரையும் ஒன்றுதான்.

நரம்பை உருவி அதிலேயே தன் கோட் சூட்டை காயப் போடும் இத்தகைய ஹீரோக்களை வைத்துக் கொண்டுதான் பிழைப்பை ஓட்ட வேண்டிய நிலைமை. கட்… வலிமை ஷுட்டிங்கில் அஜீத்தை சமாளிப்பதற்குள் அல்லு கழண்டு தில்லு இறங்கிவிடும் போலிருக்கிறதாம் வினோத்துக்கு.

ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் வலிமை படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. திடீரென வினோத்தை அழைத்த அஜீத், சென்னையில ஷுட்டிங் வச்சுக்கலாமே என்றாராம். என்ன காரணமாக இருக்கும் என்று விசாரித்தால், அஜீத்தின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. படப்பிடிப்பு முடிந்ததும் நேரே வீட்டிற்கு போய் அவரை பார்த்துக் கொள்ளலாமே என்று அஜீத் நினைத்த விஷயம் புரிந்தது. இதற்கிடையில், லைட்மேன்கள் குழு ஒன்று அஜீத்திடமே முறையிடக் கிளம்பிய தகவலும் வெளியாகியிருக்கிறது.

ஒவ்வொரு முறை படப்பிடிப்பு நடக்கும் போதும் நீங்கள் வெளியூருக்கு போயிடுறீங்க. இதனால் எங்க பிழைப்பு பாதிக்கிறது. சென்னையில் கட்டாயமாக ஷுட்டிங் வைங்க என்று கேட்டுக் கொள்ள நினைத்தார்களாம். ஆனால் கடவுளே வந்தாலும் அஜீத்தை சந்திப்பது அவ்வளவு ஈஸியில்லை அல்லவா? முயற்சி முதல் லெவலிலேயே நின்றுவிட்டது. இதை போராட்டம் உண்ணாவிரதம் என்று பெரிய விஷயமாக்க நினைத்தார்களாம் அதே லைட்மேன்கள்.

எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் வண்டியை சென்னைக்கு விடுங்க என்று கூறியிருக்கிறார் அஜீத்.

Read previous post:
யாருடா தலைவர்? ஏர்டெல்லை உலுக்கிய இளைஞர்!

Close