அடிதடியில் இறங்கிய நடிகைகள்! ஒரு அச்சச்சோ ரிப்போர்ட்!

நல்ல பைட் மாஸ்டர் அமைந்தால் மண் புழுவும் படமெடுக்கும்… மல்லாக்கொட்டையும் கர்லா கட்டையாகும்! அப்படிதான் கோடம்பாக்கத்தில் தன் புஜ பலத்தை காட்டி தெறிக்க விடுகிறார்கள் சில நடிகைகள். அண்மையில் திரைக்கு வந்த ‘பட்டாஸ்’ படத்தில் சினேகாவின் பைட், சில தொழில் முறை ரவுடிகளையே கூட நடு நடுங்க வைத்திருக்கும். ‘அடிமுறை’ என்று சொல்லப்படும் அந்த பாரம்பரிய வித்தையை அசால்டாக டீல் செய்திருப்பார் சினேகா.

என்னய்யா… இந்த பொம்பள இந்த போடு போடுது என்று ரசித்து ஓய்வதற்குள் சினேகா பயிற்சி எடுத்துக் கொண்ட வீடியோக்களை இறக்கிவிட்டார்கள். இந்த வயசுலேயும் என்னவொரு டெடிக்கேஷன் என்று அதை பார்த்து வியக்காத ஆட்களில்லை.

கட்… அமலாபால் கொடுத்திருக்கிறார் அடுத்த அதிர்ச்சியை.

‘அதோ அந்த பறவை போல’ என்றொரு படம். சிறகெல்லாம் சிக்ஸ்பேக், அசைவெல்லாம் அதிரடி என்பது போல, இந்தப்படத்தில் அமலாபால் போட்டிருக்கும் பைட், அல்டிமேட் என்கிறார்கள் படக்குழுவினர். இதற்காக ‘கிராமகா’ என்கிற அடி உதை வித்தையை கற்றுக் கொண்டாராம் அவர். ‘என்னதான் பைட் மாஸ்டர் சொல்லிக் கொடுத்தாலும், அதை செய்யறதுக்கே தனி துணிச்சல் வேணும். அமலாபாலுக்கு அப்படியொரு துணிச்சல்’ என்கிறார் டைரக்டர் கே.ஆர்.வினோத்.

ஜிம்மில் வியர்த்து வழியும் சமந்தா, குத்து சண்டை ரித்திகாசிங், வெயிட் லிஃப்டிங் ரம்யா என்று நடிகைகளின் ஆக்ரோஷ வீடியோக்கள் சொல்லாமல் சொல்வது ஒன்றே ஒன்றைதான்!

ஆக்ஷன் ஹீரோ என்று சொல்லிக் கொள்ளும் அத்தனை பேரும் இனி பொய்யா அடிச்சு, பொய்யா நடிக்க முடியாது! உழைக்கணும்… உப்பு தண்ணி வழிய வழிய உழைக்கணும்!

Read previous post:
நெருக்கடியா? ஹோம்சிக்கா? சென்னைக்கே திரும்பிய அஜீத்!

Close