’அந்தமான்’ படத்தில் மதுவுக்கு எதிரான பாடல்

சுதா மூவிஸ் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் ’அந்தமான்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்திற்காக எஸ்.பி.எல்.செல்வதாசன் இசையில், டி.ஆர்.எஸ்.ரமணி ஐயர் எழுதிய 6 பாடல்களும் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது.

படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களும் ஒவ்வொரு விதத்தில் அமைந்துள்ளது. அதிலும், கானா பாலா பாடியுள்ள “காலை மாலை தெரியாம குடிக்கிற மனுஷா…குடும்பத்தைவிட பாழாய் போன குடிதான் பெருசா….” என்ற பாடல், மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள குடிகாரர்களை திருத்தும் வகையில் அமைந்துள்ளது. கானா பாலா பாடி, ஆட்டம் போட்டுள்ள இப்பாடலில், அமைந்துள்ள அத்தனை வரிகளும், குடிகாரர்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது. இந்த பாட்டை கேட்ட பிறகு குடி பழக்கம் உள்ளவர்கள் எவரும் இனி மதுவை பற்றி யோசிக்க முடியாத அளவுக்கு, பாடலாசிரியர் ரமணி ஐயர், வரிகள் அத்தனையும் சிறப்பாக அமைந்துள்ளது.

அதேபோல, அம்மா செண்டிமெண்ட் பாடல் ஒன்றும் கேட்டவர்களை வெகுவாக கவர்ந்ததுடன், தங்களது அம்மாவை நினைக்கும்படியும் செய்தது. இதேபோல, காதல், கானா, செண்டிமெண்ட் என்று அனைத்து தரப்பி ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில், அனைத்து விதமான பாடல்களாக ‘அந்தமான்’ பாடல்கள் உருவாகியுள்ளது.

இப்படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ள டி.ஆர்.ஆஸ்.ரமணி ஐயர், எழுத்தாளர் பாலகுமாரனை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர். அவரை நேரில் சந்திக்காமலயே கடந்த 30 வருடங்களாக, அவரது எழுத்துக்களைப் படித்து, அதன் மூலம் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டவர், ‘அந்தமான்’ பாடல்கள், பாலகுமாரனின் ஆசியுடன் வெளியிடப்பட வேண்டும் என்று கருதினார். அதன்படி சமீபத்தில் பாலகுமாரை அவரது இல்லத்தில் சென்று டி.ஆர்.எஸ்.ரமணி ஐயர் சந்தித்தார். ‘அந்தமான்’ பாடல்களை கேட்ட பாலகுமரான், டி.ஆர்.எஸ்.ரமணி ஐயரின் வரிகளை வெகுவாக பாராட்டி அவருக்கு ஆசி வழங்கியதுடன், படக்குழுவினருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

டி.ஆர்.எஸ்.ரமணி ஐயர், கதை, வசனம், பாடல்கள் எழுத, எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் ஆதவன் திரைக்கதை அமைத்து இயக்கும் ‘அந்தமான்’ படத்தின் ரிச்சர்ட் ஹீரோவாக நடிக்க, மனோசித்ரா ஹீரோயினாக நடிக்கிறார். தயாரிப்பாளர் ஏ.கண்ணதாசன் வில்லனாக அறிமுகமாகும் இப்படத்தில், இசையமைப்பாளர் எஸ்.பி.எல்.செல்வதாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, முத்துக்காளை, தியாகு, நெல்லை சிவா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

கூல் ஜெயந்த் நடனம் அமைக்க, செல்வா ஆர்.எஸ் ஒளிப்பதிவில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக கப்பலில், நாயக்ன ரிச்சர்ட், வில்லன் கண்ணதாசன் இடம்பெறும் சண்டைக்காட்சி ஒன்று பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்த திரைப்படத்திலும் காட்டப்படாத அந்தமானின் பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது இப்படத்தின் மேலும் ஒரு சிறப்பபு அம்சமாகும். பிரம்மாண்ட கப்பல்களில் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படி அதிக பொருட்ச்செலவில், மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘அந்தமான்’ படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விரைவில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கபாலிக்கே கட் மேல் கட்! டென்ஷன் ஏற்படுத்திய சென்சார்?

எந்திரன் ரிலீஸ் நேரத்தில் கூட இப்படியொரு பரபரப்பு ஏற்பட்டதில்லை. கபாலி ரிலீஸ் இம்மாதம் 22 ந் தேதி என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்குள் தயாரிப்பாளர் தாணுவின் இதயத்துடிப்பில் ஏழெட்டு...

Close