எந்திரன்2 ரஜினி அதிருப்தி! விலகப்போவதாகவும் ஷாக்?

ஒருபுறம் ‘கபாலி’ கொண்டாட்டங்களால் மனம் நெகிழ்ந்திருக்கிறார் ரஜினி. ட்ரெய்லரில் அவர் சொல்லும் ‘மகிழ்ச்சி’, இன்று நாடெங்கிலும் இருக்கும் அவரது ரசிகர்களின் நெஞ்சங்களுக்கு கடத்தப்பட்டுவிட்டது. ஒரு சாதாரண ட்ரெய்லராக இருந்தாலும் சரி, ஒரேயொரு ஸ்டில்லாக இருந்தாலும் சரி. அதை லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ஷேர் செய்தும், லைக் செய்தும் கொண்டாடும் ரசிகர்களுக்காகவே இன்னும் பல படங்களில் அவர் நடிப்பதற்கு விரும்பக் கூடும். ஆனால் எந்திரன் 2 ன் பளுவாலும், அவர்களின் லேசான அலட்சியத்தாலும் ஒரு விபரீத முடிவை ரஜினி எடுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிகின்றன.

அதற்கு முன்னோட்டமாக சொல்லப்படும் சம்பவம் இதுதான். கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு சண்டைக்காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ரோப் கட்டி ரஜினியை தூக்க வேண்டிய சூழ்நிலை. வேறு வழியில்லாமல் ரஜினியும் சம்மதிக்க… அவரை மேலே தூக்கிவிட்டார்களாம். அந்த நேரத்தில்தான் அந்த ரோப் முறையாக சுழலாமல் முரண்டு பிடிக்க, அவரது இடுப்பு பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக ரோப்பை இறங்குங்க என்று அவர் கத்தியதை தொடர்ந்து யூனிட் பரபரப்பானதாக சொல்லப்படுகிறது. அந்த நிமிஷமே டைரக்டர் ஷங்கரை அழைத்த ரஜினி, “இதுவரைக்கும் எவ்ளோ செலவானதோ… அதை கொடுத்துடறேன். என்னை விட்ருங்க” என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. கடும் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டார்களாம் அத்தனை பேரும்.

இதை தொடர்ந்துதான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்திருந்தாலும் அதில் 25 நாட்கள் கூட ரஜினியை பயன்படுத்தவில்லையாம். இனிமேலும் அவரது கால்ஷீட் தேதிகளை குறைத்து எப்படியோ படத்தை முடித்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறாராம் டைரக்டர் ஷங்கர்.

எந்திரன் 2 ல் ரஜினி இருப்பார். ஆனால் எவ்வளவு இருப்பார்? அதுதான் பெரும் கேள்வியாக இருக்கிறது இப்போது!

1 Comment
  1. Shankar says

    Have some Gelusil everyday sir..soon you will be alright. 🙂

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இன்று எல்லா படப்பிடிப்புகளும் ரத்து! சலசலப்புக்கு காரணம் கார்த்தி படம்?

‘எரியுற வீட்டுல புடுங்குன வரைக்கும் லாபம்’ என்ற நோக்கத்தோடுதான் திரிகிறது சினிமா தொழிலாளர்கள் அமைப்பு. ஒரு படத்தின் தயாரிப்பு செலவு என்பது ஒருபுறம் இருந்தாலும், ‘தயாரிப்பில் வீணான...

Close