இதுதான் ஜில்லா படத்தின் கதை

கேரளாவில் சூப்பர் ஸ்டராக இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு வந்தால் அவரையும் வில்லனாக்கிவிடுவார்கள். விஜய்யுடன் மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தில் அவருக்கு என்ன கேரக்டர் என்று நினைத்தீர்கள்? வில்லனாம்… கதையின் ட்விஸ்ட்டே இதுதான். தனது அப்பா என்று மோகன்லாலை விஜய் நினைத்துக் கொண்டிருக்க, அவர் அப்பாவா? அல்லது தன்னையே போட்டுத் தள்ள நினைக்கும் வில்லனா என்பது க்ளைமாக்சில்தான் தெரியுமாம். இப்படியொரு மர்ம முடிச்சோடு படத்தை விறுவிறுப்பாக உருவாக்கி வருகிறாராம் நேசன்.

படத்தில் விஜய்யும் மோகன்லாலும் பயங்கரமாக மோதிக் கொள்வது போல் கதையமைப்பு இருக்கிறதாம். கதைப்படி விஜய்தான் மோகன்லாலுக்கு மகன். ஆனால் அவர் உண்மையான மகனல்ல. வளர்ப்பு மகன். இதை விஜய்யிடம் மறைத்துவிடுவாராம் மோகன்லால். அதே நேரத்தில் தன் வளர்ப்பு மகன் என்று சொல்லி விஜய்யுடன் சேர்த்து இன்னொருவனையும் வளர்ப்பாராம் அவர். அவனை பாதுகாக்கும் பொறுப்பை விஜய்யிடம் கொடுப்பாராம். நிஜத்தில் அவன்தான் மோகன்லாலின் மகன்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஏற்படும் மோதலில் விஜய் அந்த இன்னொருவனை கொன்றுவிட, மோகன்லால் விஜய்யை என்ன செய்தார் என்பதுதான் முடிவாம். க்ளைமாக்சில் மோகன்லாலும் விஜய்யுமே மோதிக் கொள்வது போல காட்சிகள் இருப்பதால், அதை எப்படி இயக்குனர் பிரச்சனையில்லாமல் சொல்லப் போகிறாரோ என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் ஜில்லாவில் பணியாற்றும் தொழிலாளர்கள்.

The story of Jilla is old wine in new bottle!

Director Nesan has found out a script from the archives and changed the script according to the present day environment, if one goes by the hearsay of the story of Vijay starrer Jilla. Mohanlal who is playing an important role in the film is the villain of the film, so we are told. Vijay who was told that he was the son of Mohanlal was not his real son but foster son. The real son will be made to look as foster son and Mohanlal would ask Vijay to take care of the real son, but he would be killed at the hands of Vijay. How Mohanlal takes revenge on Vijay or how Vijay overcomes his foster father’s attempts to eliminate him is the crux of the story. How Nesan has to do justice for Mohanlal for his Kerala fans is the question lingering in the minds of the unit members.

2 Comments
  1. Ramesh says

    I think this is mothi vilaiyadu film story

  2. Ajay.S says

    Story line will be intresting… But i hope the songs & comedy will spoil the movie..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினியின் வயது 162

ரஜினியின் வயது 162. இப்படி சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. டிசம்பர் 12 ந் தேதி ரஜினிக்கு பிறந்த நாள். அதற்கு முன்னதாக தமிழகமெங்கும்...

Close