‘ இந்தா புடிங்க கால்ஷீட் ’ கார்த்தியை கவிழ்த்த கோலிசோடா!
எவ்வளவு கனமான பூட்டுகளையும் லொட்டென்று மண்டையில் தட்டிவிட்டு போகிற சக்தி வெற்றிக்கு மட்டுமே உண்டு. அதை சமீபகாலத்தில் நன்றாகவே உணர்ந்திருப்பார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். இப்போது அவர் இயக்குனர் விஜய் மில்டன். அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது என்றொரு படத்தை அவர் இயக்கி அது வெளிவந்த பின்பு விஜய் மில்டனுக்கு எதுக்கு வேண்டாத வேலை? நல்லாதானே கேமிரா பண்ணிட்டு இருந்தாரு? என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் குச்சுப்புடி ஆடினார்கள்.
ஆனால் தன் முயற்சியில் சற்றும் குறையாத வேதாளமாக அவர் தோல்வி என்கிற விக்ரமாதித்யனின் முதுகை விட்டு ஜம்ப் ஆகி இன்று எங்கேயோ போய்விட்டார். மார்க்கெட்டில் டாப் 10 ஹீரோக்கள் கூட, டேட்ஸ் ஃபிரியாதான் இருக்கு. கதை சொல்ல எப்ப வர்றீங்க என்கிற அளவுக்கு வெற்றியின் மைந்தன் ஆகிவிட்டார். எல்லாம் ஒரு கோலி சோடா செய்த மாயம்.
அப்படத்தின் தாறுமாறான வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே மக்களோடு மக்களாக விழுந்து புரள்கிற சாமானியனின் கதையை எடுக்கப் போகிறாராம் விஜய் மில்டன். இந்த முறை இவர் மீது முழு நம்பிக்கை வைத்து கால்ஷீட் கொடுக்கப் போகிறார் பருத்திவீரன் கார்த்தி. இந்த படத்தை கோலிசோடாவை வெளியிட்ட லிங்குசாமியே தயாரிக்கப் போகிறாராம். ஏற்கனவே இவருக்கும் கார்த்திக்கும் பையா சென்ட்டிமென்ட் இருக்கிறது. இது போதாதா?
Karthi likely in Vijay Milton’s next film
Nothing succeeds like success and the director Vijay Milton must have been experiencing the state with his colossal victory through Goli Soda. He has become instant hit in K-town that even top heroes are ready to give dates for him. But Vijay Milton he is, not perturbed by the success in Goli Soda nor the failure through Azhagai irukkirai Bayamai Irukkiradhu, continues his journey balancing between camera work and direction.
We hear he is readying a script which revolves around a common man. Incidentally the common man has become an important feature in Indian politics now. So if he decides the film on common man, we hope it would go well with the current situation in the country.
Karthi is likely to play the lead in the film which will be produced by director Lingusamy on behalf of his home banner Thiruppathi Bros. Lingusamy has already produced Paiya with Karthi and hopes the same sentiments will work this time too.