சவுண்டே வராத சங்குக்கு உதடே வீங்குற அளவுக்கு உதார்… -வில்லங்கத்தில் விஜய் ‘லேசு’பதி!

விஜய் சேதுபதியை விஜய் ‘லேசு’பதியாக்கி விட்டது பாலகுமாரா. வாங்கியவர்கள் எல்லாருக்கும் வண்டி வண்டியா நஷ்டம் என்கிறது கலெக்ஷன் ரிப்போர்ட். ஆனால் தயாரிப்பாளருக்கு செம லாபம். ஏனென்றால் விஜய் சேதுபதியின் முந்தைய படங்கள் தொடர் ஹிட் என்பதால் இப்படத்தையும் அதிக விலைக்கு விற்றுவிட்டார்கள்.

இந்த லாப நஷ்ட கணக்கையெல்லாம் பார்த்து கவலைப்படவோ, கண்ணீர் வடிக்கவோ துளி கூட நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. ஏனென்றால், அவர் பிரச்சனையே அவரை துரத்தி துரத்தி கொத்திக் கொண்டிருக்கிறது. ‘சங்குதேவன்’ என்றொரு படத்தை இவரே தயாரிக்கிறார் அல்லவா? இந்த படத்தின் ஷுட்டிங் திண்டுக்கல்லில் நடந்தது. மொத்தமே எட்டு நாட்கள்தான் ஷுட்டிங் பண்ணியிருக்கிறார்கள். அப்படீன்னா கால்வாசி படம் கையில இருக்கணுமே என்கிற சந்தோஷத்தில் உள்ளே எட்டிப்பார்த்தால், கைப்பிடி தேறவில்லையாம்.

டைரக்டர் எடுத்தது மொத்தம் ரெண்டே ரெண்டு சீன்கள்தானாம். விட்டால் பாலா அமீருக்கெல்லாம் ட்யூஷன் எடுப்பார் என்கிற அளவுக்கு நிதானமாக படம் பிடிக்கிறாராம் இவர்.

எட்டு நாளில் ரெண்டே சீன்தானா? அடங்கொப்புறானே… என்று அதிர்ந்து போன விஜய் சேதுபதி தொண்டை வலிக்க ஒரு பேக்கப் சொல்லிவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டார். இந்த பேக்கப் நிரந்தரமாக இருந்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறது திரையுலக ‘சிடுசிடு’ வட்டாரங்கள்.

சவுண்டே வராத சங்குக்குதானா இப்படி உதடே வீங்குற அளவுக்கு உதார் விட்டாங்க?

Vijay Sethupathi should learn to grow

Vijay Sethupathi having given hat-trick hits, is in for trouble now. He should have learnt to grow slowly and steadily. Vijay’s recent outing Idharkuthane Asappatai Balakumara is in doldrums as the BO as those who bought the film at a higher price looking to the previous hits of Vijay. Though the producer escaped from the loss the distributors and theatre owners have to live for another day. Vijay should have expected this. Over confident that he is, he announced his own production company to produce his next film Sangudevan with ‘Devar Magan’ moushtache. He and his team members and crew camped for 8 days at Dindugal for shooting just two scenes (Bala and Ameer are considered better now). Bewildered Vijay immediately, immediately packed off and rushed back to Chennai. The ‘pack off’ shout may likely be permanent too, perhaps!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘சசிகுமார் போதும். அந்த இன்னொரு ஹீரோ வேணாம்…’ -பாலா முடிவு

பாலா படம் வெளிவருகிற வரைக்கும் மர்மம் மர்மம்... மர்மம்தான். இத்தனைக்கும் அவர் மர்ம படம் எடுப்பவரல்ல. யூகங்கள் கொடி கட்டி பறக்கும். அவர் நடிக்கிறாராம், இவர் நடிக்கிறாராம்...

Close