‘தம்பி… உன் படத்துக்கு பாட்டு எழுதுவது நான் என் இனத்திற்கே செய்கிற துரோகம்’
இனம் அழிஞ்சு போனாலும் குணம் அழிஞ்சு போகாதவன்தான் தமிழன். அதை நெருப்புக் கோபத்தோடு நினைவூட்டியிருக்கிறார் அண்ணன் அறிவுமதி. தனக்கு வருகிற பாடல் வாய்ப்புகளை கூட ‘தம்பிகளுக்கு கொடுங்க’ என்று மாற்றி மடை திறக்கிற நல்ல மனுஷன் இவர்.
‘என் தம்பி…’ என்று எல்லா மேடையிலும் லிங்குசாமியை புகழ்கிற இந்த அறிவுமதி ‘இனம்’ பிரச்சனையில் லிங்குசாமியின் அணுகுமுறை பிடிக்காமல் என்ன செய்தார் தெரியுமா? லிங்குசாமி தான் இயக்கும் ‘அஞ்சான்’ படத்திற்கு பாடல் எழுதுங்க என்று இவருக்கு அனுப்பி வைத்த மெட்டை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டார் அவருக்கே. ‘
தம்பி… உன் படத்துக்கு பாட்டு எழுதுவது நான் என் இனத்திற்கே செய்கிற துரோகம்’ என்று கூறிவிட்டாராம். அறிவுமதியின் இந்த செயல் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார் லிங்கு.
supper real tamilan
Well done Arivumadhi sir