‘நறுக்கிட்டேன்…’ லிங்குசாமி முடிவால் பதற்றம் தணிந்தது
‘இனம்’ படம் தமிழினத்தை கேவலப்படுத்துவதாக உணர்வாளர்கள் கொந்தளிக்க, அதைவிட பெரும் கொந்தளிப்புக்கு ஆளானார் படத்தை தமிழகத்தில் வெளியிட்டிருக்கும் லிங்குசாமி. இந்த விஷயத்தில் அவரை வற்புறுத்திதான் உள்ளே கொண்டு வந்தார் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான சந்தோஷ்சிவன். ஈழ தமிழர்கள் விஷயத்தில் எல்லா காலங்களிலும் எதிரியாக இருக்கும் மலையாளிகள், இப்போது மட்டும் என்ன செய்துவிடப் போகிறார்கள்? இந்த உண்மை புரியாமல் சிக்கிக் கொண்ட லிங்குசாமிக்கு ஆதரவாக இங்கேயிருக்கும் சிலர், கூவ வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
‘நீங்களும் கொஞ்சம் கூவணும்…’ என்று அழைக்கப்பட்ட கவிஞர் வைரமுத்து, படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்லாமலே கிளம்பிவிட்டார். ஆனால் அவர் படம் பார்க்க வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மட்டும் விளம்பரங்களுக்கு பயன்படுத்திக் கொண்டது தயாரிப்பு தரப்பு. இதற்கிடையில் ஆங்காங்கே படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு சலசலப்பு, போலீஸ் தடியடி என்று போனது நிலைமை.
இந்த நிலையில் லிங்குசாமிக்கு நெருக்கமான, அதே நேரத்தில் உணர்வுகளையும் விட்டுக் கொடுக்க முடியாத சில உணர்வாளர்கள், ஆட்சேபணைக்குரிய காட்சியை மட்டும் நீக்கிவிடுங்களேன் என்று அட்வைஸ் செய்தார்களாம். அதை ஏற்றுக் கொண்ட லிங்குசாமி, சிங்களர்களை தாங்கிப் பிடிக்கும் சில காட்சிகளுக்கு ‘கட்’ கொடுத்துவிட்டார்.
இனம் தியேட்டர்களில் பணம் அள்ளுமா என்பது இனிமேல்தான் தெரியும்…
Lingusamy removes the controversial scenes from Inam!
Producer-Director Lingusamy who is distributing Santosh Sivan’s Inam has confirmed that he had removed few controversial scenes depicting Sinhalese in positive way. He had done this after few of his well wishers and directors who supported him quoting creative freedom, had suggested to Lingusamy to remove those scenes which hurts the sentiments of Tamils. Obliging their advice Lingusamy has confirmed that he had removed those scenes from the film.
Would the protests subside and would the film bring in some money to the distributors, only time will say.