நித்தியானந்தாவின் ஆண்மை சோதனை முடிவு இம்மாதம் 27ல் தாக்கல்
பலாத்கார புகார் தொடர்பாக ராம்நகர் நீதிமன்றத்தில்,சர்ச்சை சாமியார் நித்தியானந்தா இன்று ஆஜரானார். ஆரத்திராவ் என்ற முன்னாள் பெண் சிஷ்யை, நித்தியானந்தா சாமியாராகுக்கு எதிராக அளி்த்த பாலியல் புகாரின் பேரில் கர்நாடக சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் நித்தியானந்தா சாமியாருக்கு ஆண்மை பரிசோதனை, குரல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதனிடையே வழக்கு இன்று ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி கோர்ட்டில் நித்தியானந்தா ஆஜராக வேண்டியது கட்டாயம். அதன்படி இன்று நித்தியானந்தா மற்றும் அவரது ஐந்து சிஷ்யர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதையொட்டி கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் விசாரணையை 27ம்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இதையடுத்து சாமியார் தனது சிஷ்யர்களுடன் பிடதி ஆசிரமத்துக்கு திரும்பினார். 27ம்தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது, நித்தியானந்தாவிடம் நடத்தப்பட்ட ஆண்மை, குரல் பரிசோதனை முடிவுகள் கோர்ட்டில் சிஐடி போலீசாரால் தாக்கல் செய்யப்படும்.