புதுமுகங்கள் நடிக்கும் “ அந்த குயில் நீதானா “

                          

பொண்ணு பிலிம்ஸ் படநிறுவனம் சார்பாக குஞ்ஞய்யப்பன்,ராஜ்மார்த்தாண்டம் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “அந்த குயில் நீதானா”

சாகர் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக கீர்த்திகிருஷ்ணா நடிக்கிறார்.

மற்றும் வேணு, சலாம் குந்தத்து, ராஜ்மார்த்தாண்டம்,ராஜன், ஸ்ரேயாஜோஸ், சாருலதா, ஜெசி,ராக்பியா, ஸ்ரீகாந்த், தமில்வால்டர், மூனார்சிவா, விபின்குமார் சுரேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  ரஞ்சித்ரவி

இசை   –  கிருஷ்ணபிரசாத்துவாரகா

பாடல்கள்   –  அஜெய்

வசனம் , இணைஇயக்கம்  –  A.P.காசிம்

தயாரிப்பு மேற்பார்வை  –  மது

கலை   –  பிரதீப் /   கதை    –  கனகம் ஸ்டெல்லா

எழுதி இயக்குபவர் –  ஸ்டான்லிஜோஸ்

தயாரிப்பு  –   குஞ்ஞய்யப்பன்,ராஜ்மார்த்தாண்டம்

படம் பற்றி இயக்குனர் ஸ்டான்லிஜோஸிடம் கேட்டோம்…

இது கிராமத்து கதை ! கிராமத்தில் உள்ளவர்கள் அதிசயக்கும் அழகி பவளம். அவளது ஆசையோ முறைமாமன் முத்துவை காதலிப்பது தான்.டூரிஸ்ட் கைடாக இருக்கும் முத்து அனைவரிடமும் சகஜமாக பழகுவான். அப்படிதான் டூரிஸ்டாக வந்த அஞ்சலியிடம் பழக நேர்கிறது.சாதாரணமான அந்த பழக்கம் மற்றவர்களுக்கு வேறு மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் கதை! முத்து – பவளம் காதல் சேர்ந்ததா என்பதை “ அந்த குயில் நீதான “ படத்தின் மூலம் சொல்கிறோம்.

படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நெல்லை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் நடைபெற்றிருக்கிறது என்றார் ஸ்டான்லிஜோஸ்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய்யை கூப்பிடணும்…. விஜய்யை கூப்பிடவே கூடாது… அநியாய குழப்பத்தில் ஐ ஆடியோ விழா?

ஷங்கரின் குட் புக்கில் எப்போதும் இருக்கிறார் விஜய். அண்மையில் தனது பிறந்த நாள் பார்ட்டிக்கு ஷங்கர் அழைத்தது சிலரைதான். அதிலும் முக்கியமாக இரண்டே இரண்டு பேரை!. ஒருவர்...

Close