விஜய்யை கூப்பிடணும்…. விஜய்யை கூப்பிடவே கூடாது… அநியாய குழப்பத்தில் ஐ ஆடியோ விழா?
ஷங்கரின் குட் புக்கில் எப்போதும் இருக்கிறார் விஜய். அண்மையில் தனது பிறந்த நாள் பார்ட்டிக்கு ஷங்கர் அழைத்தது சிலரைதான். அதிலும் முக்கியமாக இரண்டே இரண்டு பேரை!. ஒருவர் விக்ரம். மற்றொருவர் விஜய். அந்தளவுக்கு விஜய்யின் மீது நேசத்துடன் இருக்கும் ஷங்கருக்கும், அவரது குட்புக்கில் இருக்கும் விஜய்க்கும் ஒரு சேர வந்திருக்கிறது ஒரு சங்கடம். அதுதான் இந்த ஐ படத்தின் ஆடியோ பங்ஷன்.
செப்டம்பர் 15 ந் தேதி ஆடியோ வெளியீட்டு விழா என்று அறிவித்தாகிவிட்டது. ஹாலிவுட்டிலிருந்து ஆர்னால்டே வீடியோவில் தோன்றி ‘வர்றேன்….’ என்று அறிவித்துவிட்டார். ஆனால் இந்த நிமிடம் வரைக்கும் விழா நடைபெறும் இடமும் தெரியவில்லை. இன்விடேஷனும் தயாராகவில்லை. ஏன்? ஏன்? ஏன்?
ஷங்கரின் விஜய் குறித்த கண்டிஷன்தான் என்கிறார்கள். இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கியிருப்பது ஜெயா தொலைக்காட்சி. அப்படியானால் இந்த பாடல் வெளியீட்டு விழாவை ஒளிபரப்புகிற உரிமையும் அதற்கேதான். நிலைமை அப்படியிருக்க, ஷங்கரின் ஆசை செல்லுபடியாகுமா? தலையை சொறிகிறாராம் தயாரிப்பாளர். ‘அவரை விட்டுட்டு இந்த விழாவை நடத்திடலாமே’ என்பதுதான் அவரது வேண்டுகோள். ‘விஜய் வரலேன்னா இந்த விழாவை நான் புறக்கணிப்பேன்’ என்கிற அளவுக்கு இந்த விஷயத்தில் ஷங்கர் உறுதியோடு நிற்கிறாராம். ‘விஜய் இந்த விழாவுக்கு வந்தால் நாங்க மேலிடத்திற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதனால் அவரை அழைக்க வேண்டாம்’ என்கிறார்களாம் சேனல் தரப்பில்.
‘என்னால எதுக்கு எல்லாருக்கும் சங்கடம்? நான் வீட்டிலேயே இருந்துடுறேனே…’ என்கிறாராம் விஜய்.
விழா நடக்குமா? ஆர்னால்டு வருவாரா? ஆர்னால்டே வந்தாலும் விஜய்க்கு அங்கு இடமிருக்குமா? கேள்விகள்… கேள்விகள்…