மீண்டும் வந்த ஓ போடு ராணி

ராமராஜன் ஜோடியாக வில்லுப் பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமானவர் ராணி. அதற்க்கு பிறகு குத்துப்பட்டு, கிளாமர்பாட்டு, வில்லி வேஷம் என்று எல்லா மொழிகளிலும் சேர்த்து 400 படங்களுக்கு மேல் நடித்து முடித்துவிட்ட அவர். சில காலம் நடிப்பதை நிறுத்தி இருந்தார்.

ஆடிய காலும், மேக்கப் போட்ட முகமும் அமைதியாக இருக்காது என்பார்கள். உண்மைதான். ஆந்திராவில் மேக்கப் போட்டு 2011 ல் அவர் நடித்த “நட்சாவுலே”படத்திற்காக நந்தி விருதை பெற்ற அவர் தற்போது அனுஷ்கா நடிக்கும் “ராணி ருத்ரம்மா தேவி” “பிரேம்ல பட்டாண்டி” ஒக லைலா கோசம்” “ 3 இடியட்ஸ்” போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கு மட்டும் போதாது…கலைச் சேவைக்கு என்று தமிழிலும் கவனம் செலுத்த இருக்கிறார்.

வெள்ளரிக்க பிஞ்சு வெள்ளரிக்கா (காதல்கோட்டை), ஓ போடு ஓ போடு (ஜெமினி) மாதிரி ஒற்றை பாடலுக்கு ஆட ஐடியா உண்டா? என்று கேள்வி கேட்கும் முன்பே, மறுத்த அவர் சாரி…நோ டான்ஸ்! ஒன்லி காரக்டர்ஸ் மட்டும் தான், அம்மாவா, அக்காவா, அண்ணியா, வில்லியா? எதுவானாலும் ஓ.கே நான் ரெடி நீங்க ரெடியா? என்று கேட்டார் ராணி. ப்ரஸ் அம்மா அண்ணி, வில்லி, அக்கா ரெடி !

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஷகிரா மாதிரி ஆடணும், பாடணும்… முமைத்கான் முழக்கம்!

‘ஆட்ற ஆட்டத்தில், உடம்புல இருக்கிற பார்ட்ஸ் ஏதும் கழண்டு விழுந்து விடுமோ?’ என்று அஞ்சுகிற அளவுக்கு ஆடுகிற பல கவர்ச்சி பாம்கள் திரிந்த ஏரியாதான் கோடம்பாக்கம். ‘சிஐடி...

Close