‘ முதல்ல குடும்பத்தை கவனிங்க… ’ கோச்சடையான் விழாவில் ரஜினி தன் மகள்களுக்கு அட்வைஸ்!

வெகு காலமாகவே இதோ அதோ என்று கூறப்பட்டு வந்த ‘கோச்சடையான்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது. பாலிவுட் நட்சத்திரங்களான ஷாரூக்கான், ஜாக்கி ஷெராப், தீபிகா படுகோனே ஆகியோருடன் ரஜினியின் அன்புக்கு பாத்திரமான ஏ.வி.எம்.சரவணன், கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், வைரமுத்து, ஷங்கர் ஆகியோரும் வந்திருந்தார்கள். பொதுவாகவே ஒரு ‘ஷோ’ டயத்திற்கு மட்டும் தியேட்டரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பிற சினிமா விழாக்கள் போலில்லை இது. அடுத்த ஷோவுக்கான நேரத்தையும் எடுத்துக் கொண்டு நிறுத்தி நிதானமாக நடந்தது விழா.

‘இது தானா திரண்ட கூட்டம்ல…’ என்று மார்தட்டுவது போல, சத்யம் தியேட்டரை சுற்றி திண்டுவிட்டார்கள் ரசிகர்கள். கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிடத்தின் மீது ஏறி நின்று கொண்டிருந்த ரசிகர்கள், ரஜினியின் தலை தெரிந்ததே போன ஜென்மத்து புண்ணியம் என்பது போல கூக்குரல் எழுப்பி கொண்டாட்டம் போட, அவர்களை நோக்கி மின்னல் புன்னகையை தட்டிவிட்டார் ரஜினி.

வந்திருந்த பாமர ரசிகர்களுக்கு தன் பேச்சு புரிவதை விட, எங்கிருந்தோ வந்த ஷாருக்கானுக்கும் ஜாக்கி ஷெராப்புக்கும், தீபிகா படுகோனேவுக்கும் புரிந்தால் போதும் என்று நினைத்திருப்பார் போலும். இயக்குனர் கே.பாலசந்தர் தனது உரையை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு 12 நிமிடங்கள் படித்தார். நடு நடுவே அவர் தமிழிலும் பேசியதுதான் ஆறுதல்.

ரஜினியின் முதல் ரசிகனுக்கு வயது அறுப்பத்து மூன்று என்று அதிர்ச்சி கிளப்பும் தகவலோடு தனது உரையை ஆரம்பித்தார் வைரமுத்து. ரஜினி மூன்று தலைமுறை சினிமாவை கடந்து வந்திருக்கிறார். ஒன்று பிளாக் அண் வொயிட் காலம். மற்றொன்று 3டி காலம். இப்போது மோஷன் கேப்சர் காலம் என்று அவர் கூற, பலத்த கைத்தட்டல்.

‘இந்த படத்தை ரஜினி சாரோட வழக்கமான படமா நினைச்சு அவரது ரசிகர்கள் வரக்கூடாது. டெக்னாலஜியில் நாம எவ்வளவு உயரம் வளர்ந்திருக்கோம்னு தெரிஞ்சுக்கறதுக்காக வரணும்’ என்றார் டைரக்டர் ஷங்கர்.

இறுதியாக ரசிகர்களின் அன்பு விசிலடிப்புக்கும் வேர்வை பொங்கும் கூச்சலுக்கும் நடுவே மைக்கை பிடித்தார் ரஜினி. கொஞ்சம் படம், கொஞ்சம் மகள்களுக்கு அட்வைஸ் என்று போனது அவரது ஸ்பீச்.

எனக்கு எப்பவுமே ராஜா ராணி கதை என்றாலே ரொம்பவும் பிடிக்கும். ரசிகர்களுக்காக நிறைய படங்கள் பண்ணியிருந்தால்கூட, இதுவரை ஒரு ராஜா ராணி கதை நான் பண்ணவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது. இதுவரைக்கும் தமிழ் சினிமால ஏன் இந்தியாவில்கூட யாருமே பண்ணாத ஒரு ராஜா ராணி படம் செய்யணும்னு முடிவு பண்ணித்தான் ‘ராணா’ படத்தை தொடங்க முடிவு செய்தேன். அந்தப் படத்தோட கதை எனக்குள் 20 வருஷமா ஓடிக்கொண்டு இருந்தது. அந்தப் படம் தொடங்கின நேரத்துலதான் எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அதற்கு பிறகு என்னாச்சுன்னு உங்களுக்கே தெரியும். ஆஸ்பத்திரியில சிகிச்சை முடிஞ்சு திரும்பி வந்தாலும், இந்த கதைக்கு நிறைய உடல் உழைப்பு தேவைப்பட்டுச்சு. அப்போதைக்கு அது முடியல.

ஒருநாள் முரளி மனோகர் எனக்கு போன் செய்து கே.எஸ்.ரவிக்குமார் ராணாவுக்கு பதிலா ‘கோச்சடையான்’ னு ஒரு கதை பண்ணியிருக்கிறார், கேட்டுப் பாருங்கனு சொன்னார். இப்போ பண்ண முடியாது, 2 வருஷமாவது ஆகும்னு சொன்னேன். நீங்க முதல்ல அதை கேளுங்க. அப்புறம் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம்னு சொன்னார். ராணாவைவிட எனக்கு கோச்சடையான் கதை ரொம்பவும் பிடிச்சது. ஆனா இதை இப்போ எப்படி பண்றதுனு கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட கேட்டேன். நீங்க சரின்னு சொன்னா வேற ஒரு ஐடியா இருக்கு.

‘சுல்தான்’னு ஒரு அனிமேஷன் படத்தை செளந்தர்யா பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதனால இந்த கதையை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துல பண்ணலாம்னு சொன்னாங்க. எனக்கு டெக்னாலஜி பத்தி தெரியாது. அதில எனக்கு நம்பிக்கை வேற இல்லை. இந்த படத்தை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல பேரிடம் கருத்து கேட்டேன். இந்தப் படம் பண்றதுக்கு 5, 6 வருஷமாகும். 700 கோடியாகும்னு சொன்னாங்க. அவ்வளவு செலவு எல்லாம் ஆகாது. நம்மோட பட்ஜெட்லயே பண்ண முடியும்னு அவங்க சொன்னாங்க.

உடனே செளந்தர்யாகிட்ட பேசினேன். இந்த படத்துக்காக உனக்கு பெரிய பொறுப்பு இருக்கும். பண்ண முடியுமான்னு கேட்டேன். அவங்க உடனே நான் பண்ணி காட்றேன்னு சொன்னாங்க. இந்த படம் இந்தளவிற்கு வந்ததிற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த ஊக்கம் தான். நான் படம் பாத்துட்டேன். இப்போ 3டி பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்னு எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு.

செளந்தர்யா, ஐஸ்வர்யா இரண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். இப்ப ரெண்டு பேரும் படம் இயக்குறாங்க அப்படின்னா அதற்கு தனுஷ், அஸ்வின் மற்றும் அவங்களோட குடும்பத்தினர்தான் காரணம். அவங்களோட குழந்தையா நினைச்சு, ஊக்குவிக்கிறாங்க. அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும். இன்னும் ஐஸ்வர்யா, செளந்தர்யா நிறைய படங்கள் பண்ணனும். குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நல்ல குடிமக்களை உருவாக்க முடியும் என்பது என்னுடைய கருத்து. குழந்தைகளுக்கு 10, 12 வயசு வருகிற வரைக்கும் நல்லபடியா அவங்களை வளர்க்கணும். அதற்கு பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த படம் வந்த பிறகு நிறைய பேர் இயக்கச் சொல்லி கேட்பாங்க. 2 குழந்தைகளை பெற்று என்கிட்ட கொடுத்துட்டு அதற்கு பிறகு நீங்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்க அப்படிங்கிறது எனது கருத்து. செளந்தர்யாவை நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு. அவங்க முதல்ல ஆக்‌ஷன் அப்படினு சொன்னப்போ எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. அப்புறம் ரவிக்குமார் சார் நீங்க வாங்க. இவரு ஆக்‌ஷன் எல்லாம் சொல்லட்டும், நீங்க கட் மட்டும் சொல்லுங்கனு சொன்னேன்.

ஆரவாரத்தோடு ரஜினி பேசி முடிக்க, அதற்கப்புறம் வேறொரு நட்சத்திர ஓட்டலில் நடந்த பிரஸ்மீட்டில் ரஜினி மகள் சௌந்தர்யா, நடிகர் ஆதி, ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி, படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

முக்கிய குறிப்பு – இந்த படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறாராம்.

Rajini’s speech was the highlight of Kochadaiiyaan audio event!

Super Star Rajini’s magnum opus Kochadaiiyaan’s audio release was held on 9th March at Sathyam Cinemas, Chennai. The Cinema Hall was booked initially cancelling a show, but the event was so huge, the makers have to cancel the next show too. Such was the grandeur of the event. While all the cast and crew was present during this important event, the who is who of the film industry was present in full strength. Apart from Rajinikanth, Shah Rukh Khan, Deepika Padukone, Jackie Shroff, Sarath Kumar, Aadhi, AR Rahman, Resul Pookutty, Dr. Murali Manohar, directors KS Ravikumar, SP Muthuraman, Producer AVM Saravanan, director Shankar, lyricist Vairamuthu and others made their presence felt through their memorable speech.

The event saw such a huge crowd outside the multiplex only to have a glimpse of their hero superstar Rajinikanth. He never failed to recognise their love and affection, as he waved them back.

The event has begun with prayer song sung by Ashram school students, following which trailers of the film in Tamil and Hindi was screened. The trailer was an instant hit as it showcased Rajini’s style and punch lines.

Soundarya Ashwin director of the film welcomed the gathering and explained how the film was made in motion capture technique, and insisted it is not a cartoon film. A short audio-visual was shown on the making of Kochadaiiyaan.

Director K Balachandar who normally speaks in Tamil spoke in English from the written script he brought, perhaps to make sure those from Bollywood understands his speech. He however deviated from the text at times and spoke in Tamil too. While he said that the day he shot Rajini in his first day of shoot, the director said that he realised that Rajini would create history. Director SP Muthuraman added colour to it by saying when Rajini opened the gate in the film, he walked into our hearts straightaway.

Lyricist Vairamuthu boasted himself as the first fan of Rajini and went on to say that Rajini is the only one who has acted in 4 eras of film industry, viz. black and white, colour films, 3D and now Motion Capture Technology. He also explained that Kochadaiiyaan is the other name for God Shiva. Director Shankar requested the fans should come and watch Kochadaiiyaan for its technical brilliance first before coming to watch Rajini in the film.

Music composer praised Soundarya for her determination in making the film and appreciated that she did marvel in making the film in the shortest time and lowest cost possible, comparing that Hollywood would make such movies taking a minimum of 4-5 years and with huge cost. He said that this film would identify the Indian films globally.

Shah Rukh Khan, the Chief Guest, speaking on the occasion said that Indian Cinema will reach new high with the release of Kochadaiiyan. He also said that the special effects and graphics of the film are really awesome.

Finally Rajinikanth took the mike and started slowly and began to impress everyone as is his wont with brilliant speech which was not only for the audience but also for his two daughters as well.

“I love Raja Rani Stories. It was my desire to do a historical film. Director KS Ravikumar brought me in to Rana, but due to my ill health I could not act and the film was abandoned. Later on producer’s Murali Manohar’s request I heard Kochadaiiyaan story. I liked the story. When I asked Ravikumar as to how it could be made, he told me, he would plan it if I were to give him the green signal. He explained me that my daughter Aishwarya was doing a animated film Sultan which could be converted as Motion Capture film and made as Kochadaiiyaan. When I discussed with my friends including the music composer, everyone frightened me saying that it will be time consuming and huge budget film. Later I spoke to Soundary if she was confident of doing the film as it was very huge responsibility. She was confident personified. If this film was successful it is because of the encouragement shown by AR Rahman during the making of the film”, narrated the brief outline as to how the film Kochadaiiyaan come into existence.

While he revealed that 3D work is currently going on, he indicated that the film has come out very well.

While he appreciated and felt happy about his two daughters who are making a name in the industry, he thanked their husbands without whose support it would not be possible for them to come up to this level, he said. He advised them to take care of their children at least till they grow 10-12 years of age, and can do whatever they wanted to. He was excited when he said that after the success of the film Soundarya may get opportunities to direct films, but my point of view would be that let her first give me at least two kids, after that let her concentrate on other matters.

After the event, press meet of the film was held in a star hotel in which Soundarya Ashwin, producer Murali Manohar, Aadhi, Resul Pookutty were participated.

Scoop:  It is heard that Rajini will be seen in 3 roles in the film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிணமான 90 வயது முதியவருக்கு மின் அதிர்ச்சி மூலம் உயிர் திரும்பியது

சவுதி அரேபியாவின் தலைநகரான ஜெட்டாவில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் செங்கடலின் ஓரம் அமைந்துள்ள நகரம் அல் குன்ஃபுடா. இங்கு வசிக்கும் 90 வயது...

Close