ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் கையெழுத்திட்ட ரூபாய் நோட்டுகள் செல்லும்

பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி வகித்த டி.சுப்பாராவ், கடந்த ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். புதிய கவர்னராக ரகுராம் ராஜன் பதவியில் உள்ளார். ஆனால் இந்த 2014-ம் ஆண்டு ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு அச்சகம் வெளியிட்டுள்ள 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில் பழைய கவர்னர் டி.சுப்பாராவின் கையெழுத்து உள்ளது.

இவற்றின் செல்லுபடி தன்மை குறித்து பொதுமக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாரத ரிசர்வ் வங்கி ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது என்பது ஒரு தொடர்பணி. இதில் மாற்றம் செய்வது நீண்டதொரு பணி. அது நடந்து வருகிறது.

இது முடிய சிறிது காலம் ஆகும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, முன்னாள் கவர்னர் டி.சுப்பாராவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மீண்டும் ரசிகர் மன்றம்! அஜீத் மனதில் புதிய முடிவு…

தேன் கூட்டில் கல்லெறிந்தால் கூட, ஈ தன் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளாது. அப்படிதான் அஜீத் ரசிகர்களும். தமிழ்நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்து தனக்கு புகார் கடிதங்கள் வந்து...

Close