லாபமோ நஷ்டமோ தொடர்ந்து பத்து படங்கள் தயாரிப்பேன்

எப் சி எஸ் கிரியேசன்ஸ்-துவார் சந்திர சேகர்  தனது ஐந்தாவது படமான ‘தொட்டால் தொடரும்’ படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு  படங்களைத் தயாரிக்கவிருக்கிறார். 
 
வீர சேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பாக்கணும் போல இருக்கு, இருவர் உள்ளம் போன்ற படங்களைத் தந்த எப் சி எஸ் கிரியேசன்ஸ்-துவார் சந்திர சேகர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த வெற்றிப்படம் தொட்டால் தொடரும். கேபிள் ஷங்கர் இயக்கியிருந்தார். 
 
தனது தொட்டால் தொடரும் படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது லாபமோ நஷ்டமோ தொடர்ந்து பத்து படங்கள் தயாரிப்பேன். திறமையானவர்களை அறிமுகப்படுத்துவேன் என்று அறிவித்திருந்தார். அந்த வாக்குறுதியின்படி இப்போது  இரண்டு  புதியவர்கள் இயக்க அடுத்தக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.  
 
 
எட்டுத்திக்கும் மதயானை, வம்சம் ஆகிய படங்களில் நடித்து  நமக்கு நடிகராக,  அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளின் இயக்குனராக அறிமுகமான  டி. ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு படம் செப்டெம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஊட்டி  மற்றும் கோவையில் தொடங்குகிறது. யு கே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். எல் வி கணேஷ் இசையமைக்கிறார். அதோடு மிக முக்கியமான நடிகர் ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்துகொண்டிருக்கிறது.
 
அடுத்து துவார் சந்திர சேகர் தனது மகன் கோவின் (Govin) நடிக்க பசங்க மாதிரியான குழந்தைகளுக்கான படத்தையும் தயாரிக்கிறார்.  தனது மகனையும் இந்த திரையுலகில் அறிமுகப்படுத்துவதில்  பெருமை கொள்வதாகக் குறிப்பிட்ட தயாரிப்பாளர் சந்திர சேகர் இப்படமும் என் வாழ்வில் பெருமை கொள்ளக்கூடிய படமாக அமையும். ஏனெனில் இது குழந்தைகளின் முக்கிய பிரச்சனைகளை பேசக்கூடிய கதை எனக் குறிப்பிட்டார். மற்ற விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆவி மீது நம்பிக்கை இல்லாத சத்யராஜ் ஆவியா நடிக்கிறாராம்ல?

நீர்தான் ஜாக்சன் துரை என்பவரோ? என்கிற வீரபாண்டியன் கட்டபொம்மன் வசனத்தை பேசி ரசிக்காதவர்களே இருக்க முடியாது. குடும்பத்துல ஒருத்தராவே மாறிவிட்ட ‘ஜாக்சன் துரை’ என்ற பெயரையே படத்தின்...

Close