‘விண்டோ சீட்’ வேணும்னா எட்டு மணிக்கு வடபழனி பஸ் டெப்போவுக்கு ஓடுங்க…
விண்டோ சீட் என்பது, சைட் அடிப்பவர்களும் அடிக்கப்படுகிறவர்களும் மட்டுமே அடையக் கூடிய ஆனந்தம். கரு.பழனியப்பன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் கதை என்னவோ தெரியாது. ஆனால் இந்த தலைப்பு… பல இளசுகளை காத்திருக்க வைத்திருக்கிறது. கதையில் அவரவரும் வந்து போனாலும் ஆச்சர்யமில்லை அல்லவா?
பார்த்திபன் பஸ் டிரைவராகவும், விமல் கண்டக்டராகவும் நடித்திருக்கும் இப்படத்தில் பூர்ணா ஹீரோயினாக நடித்திருக்கிறார். நாளை காலை எட்டு மணிக்கு வடபழனி பஸ் டெப்போவுக்கு போகாதவர்கள் பஸ்சை மட்டுமல்ல, ஒரு இனிய ஈவன்ட்டையும் தவற விடுவீர்கள். ஏனென்றால் இங்குதான் ஜன்னல் ஓரம் படத்தின் பிரமோஷனை ஆரம்பிக்கிறது அப்படக்குழு. எட்டு மணிக்கு இங்கிருந்து கிளம்பும் ஸ்பெஷல் பஸ்சில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் கிளம்புகிறார்கள். சென்னையின் பிரதான இடங்களில் பஸ்சை நிறுத்தி இப்படத்தின் பாடல்களை வெளியிடுகிறார்கள்.
முக்கிய குறிப்பு- படத்தில் மட்டுமே பஸ் டிரைவராக நடித்திருக்கும் பார்த்திபன் இந்த பஸ்சை ஓட்டப்போவதில்லை. அதான் தீவிர ரசிகர்கள் நம்பி தொற்றிக் கொள்ளலாம்!
Jannal Oram audio release at Vadapalani Bus Terminal
Karu Pazhaniappan’s Jannal Oram audio launch is to happen on 17th Oct. at Vadapalani Bus stand, at 8 a.m. The team will be launching the audio there and from there, all cast and crew of the film will travel in a special bus and hit all corners of the city, promoting the film, as well as releasing the album. Certainly a novel way to promote the film indeed, as this would give an opportunity for the makers to interact with people asking them to see the film at the theatres. Partheban playing the driver’s role in the film and Vemal playing the role of conductor.
Dear friend
I wnt to give dubbingvoice or act in good role in serial.. whom to approach? pl guide me.