வீரம் மாதிரி, நாங்களும் 10 ந் தேதி வருவோம்… ஜில்லா தயாரிப்பாளர் பிடிவாதம்!
அஜீத் விஜய் படங்களின் நேரடி மோதலால் இதுவரை இல்லாத திருநாளாக இந்த பொங்கல், ‘பொங்கலோ பொங்கல்’ ஆகிவிடும். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் சில இடங்களில் ரத்தப் பொங்கலாக ஆகிவிடாமல் இருக்க வேண்டுமே என்கிற கவலைதானாம் காவல் துறைக்கு. இப்போதிருந்தே இந்த மோதலை தவிர்க்க வேண்டும் என்று லோக்கல் ஸ்டேஷன்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் வருகிறதாம். இப்பவே பேனர் கட்டுவதில் பிரச்சனை என்கிறார்கள்.
சில தியேட்டர்களில் இரு ஹீரோக்களின் ரசிகர்களுமே முஷ்டியை மடக்கிக் கொண்டு திரிவதால், ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் நடுவில் குறைந்தது நான்கு நாட்களாவது இடைவெளி இருக்கட்டும் என்று நினைக்கிறதாம் அதிகார மட்டம். வீரம் ஜனவரி 10 ந் தேதி ரிலீஸ் என்று முன்பே அறிவித்துவிட்டார்கள். அப்படியென்றால் ஜில்லாதானே 14 ந் தேதி வர வேண்டும்? தயாரிப்பாளர் சங்கம், மற்றும் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் எல்லாரும் 14 ந் தேதி வாங்க என்று அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
ஆனால் சூப்பர்குட் நிறுவனம் சார்பில் சொல்லப்படும் தகவல் என்னவென்றால், 10 ந் தேதியே நாங்களும் வருவோம் என்பதுதான். இந்த குழப்பத்திற்கு ஒரு முடிவு கட்டவில்லை என்றால் நாடு முழுக்க மண்டையிடிகள் சர்வ சாதாரணம் ஆகிவிடும். முன் கூட்டியே தடுப்பது இரு தரப்புக்கும் நல்லது. யார் விட்டுக் கொடுக்கப் போகிறார்களோ?
Makers of Jills have been requested to postpone but RB Choudhary firm!
Pongal 2014 is expected to be clash of the titans as Ajith’s Veeram and Vijay’s Jilla are set to hit the screens on the same. While it is good for the fans, it is going to be big head-ache for Police as they have to control unruly mob at theatres with fans of both stars vying to project their heroes. It is heard that Police Stations near the theatres where these films are to be screened, have been instructed to take all pre-cautions to avert blood-shed and goondaism. It will be trouble for theatres too – especially dual screens – though they are ready to accommodate the films of both stars.
Meanwhile, Producers’ Council, Distributors and Theatre Owners’ Association have made a request to the producers of Jilla, Super Good Films, to postpone the release of their film to 14th Jan. to avoid clashes. As Veeram makers are the first to announce the release of the film on 10th Jan. the request has been made to Jilla who have announced the release date yesterday. However, it is learnt that the owner of Super Good Films, RB Choudhary is firm to release his film on 10th Jan.
It will be in the interest of everyone concerned and more so to avoid rowdyism and clashes at the theatres making it inconvenient for other fans especially women audience, good sense to be prevailed by concerned parties, one hopes.