உலகம் முழுக்க ஓ.கே! தமிழகத்தில் பெப்பே! 2.0 கலவர கலெக்ஷன்?

தமிழ்சினிமாவின் பெருமை என்று கொண்டாடப்பட வேண்டிய சினிமாதான் 2.0. ஷங்கர் மட்டும் இன்னும் மெனக்கெட்டிருந்தால் 100 சதவீத சந்தோஷம் கிடைத்திருக்கும். ஆனால் திரைக்கதையோட்டத்தில் திடுக் திடுக் பிரேக் விழுந்ததால் 2பாயிண்ட்0 குழந்தைகளுக்கு மட்டும் குதூகலம் என்ற அளவோடு நின்றுவிட்டது.

இருந்தாலும் இப்படத்தை உலகம் முழுக்க வெளியிட்டு தமிழனின் பெருமையை பறைசாற்ற கிளம்பியிருக்கிறது லைகா. அடுத்த ஆண்டு சீனாவில் பெருந்திரளான தியேட்டர்களில் இப்படம் வெளியாகவிருக்கிறது.

ஆனால் தமிழகம் மற்றும் பிற மாநில கலெக்ஷன்கள் விபரம் என்ன? ஓவர்சீஸ் ஏரியாவில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பென்ன? மேலோட்டமாக பார்த்தால் எலி எலக்ட்ரிக் ஒயரை கடித்தது போல ஒரு எபெஃக்ட் கேட்கிறது.

மதுரை அன்புச்செழியன் இப்படத்தை 100 கோடி கொடுத்து டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் வாங்கியிருக்கிறார். அவரே மற்ற மற்ற ஏரியாக்களுக்கு பிரித்து விற்றிருக்கிறார். இந்த வகையில் சுமார் 50 கோடி வரைக்கும் அவருக்கு அடிபடும் என்கிறார்கள். எப்படியிருந்தாலும் இந்த நஷ்டத்தை லைகா ஈடு செய்துவிடும் என்றாலும் நிலைமை இதுதான். நல்லவேளையாக சென்னை சிட்டி மட்டும் தாறுமாறான கலெக்ஷன். எஸ்.பி.ஐ சினிமாஸ் மூலம் சிட்டியில் வெளியிடப்பட்ட 2.0 முதலீடு செய்த தொகையை முழுசாக வசூலித்து மேலும் சில கோடிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

மற்ற மாநிலங்களில், குறிப்பாக இந்தியில் இப்படம் முதலீடு செய்த தொகையை முழுமையாக ஈட்டிவிட்டதாகவும் சொல்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 2.0 சறுக்கியது ஏன்?

குழந்தைகள் பார்க்க வேண்டிய இப்படம், தேர்வு நேரத்தில் வெளியானது முதல் தவறு. அதற்கப்புறம் 3டி யில் நல்லாயிருக்கு. 2டி மோசமா இருக்கு என்கிற ஏகோபித்த விமர்சனம். தமிழகம் முழுக்கவே கணக்குப் போட்டால் சுமார் 300 என்கிற அளவுக்கே 3டி தியேட்டர்கள் அமைந்திருக்கின்றன. இவ்விரண்டு மோசமான விளைவுகளால் படம் நொண்டியடித்துவிட்டது.

ரத்தமும் வேர்வையும் சிந்தி உருவாக்கப்பட்ட இந்த டெக்னாலஜி கிங், பரிட்சை… பள்ளிக்கூடம்… என்கிற சோல்ஜரிடம் தோற்றுப் போனது விதியா, பொறுப்பின்மையா?

பணம் போட்ட லைகாதான் ஃபீல் பண்ணணும்!

5 Comments
  1. ஜீவா says

    ///////தமிழகத்தில் மட்டும் 2.0 சறுக்கியது ஏன்?

    குழந்தைகள் பார்க்க வேண்டிய இப்படம், தேர்வு நேரத்தில் வெளியானது முதல் தவறு. அதற்கப்புறம் 3டி யில் நல்லாயிருக்கு. 2டி மோசமா இருக்கு என்கிற ஏகோபித்த விமர்சனம். தமிழகம் முழுக்கவே கணக்குப் போட்டால் சுமார் 300 என்கிற அளவுக்கே 3டி தியேட்டர்கள் அமைந்திருக்கின்றன. இவ்விரண்டு மோசமான விளைவுகளால் படம் நொண்டியடித்துவிட்டது.

    ரத்தமும் வேர்வையும் சிந்தி உருவாக்கப்பட்ட இந்த டெக்னாலஜி கிங், பரிட்சை… பள்ளிக்கூடம்… என்கிற சோல்ஜரிடம் தோற்றுப் போனது விதியா, பொறுப்பின்மையா?//////

    இதெல்லாம் சப்பைகட்டு காரணம் சார்.

    உண்மையான காரணம் –

    ////ஷங்கர் மட்டும் இன்னும் மெனக்கெட்டிருந்தால் 100 சதவீத சந்தோஷம் கிடைத்திருக்கும். ஆனால் திரைக்கதையோட்டத்தில் திடுக் திடுக் பிரேக் விழுந்ததால் 2பாயிண்ட்0 குழந்தைகளுக்கு மட்டும் குதூகலம் என்ற அளவோடு நின்றுவிட்டது//// – இதுதான்.

    இது மாதிரி பெரிய பட்ஜெட் படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் பண்ணனும்னா ரிப்பீட் ஆடியன்ஸ் வரணும். இந்த படத்தை முதல் தடவை பார்க்கறதுக்கே முக்க வேண்டி இருக்கு. இதுல ரிப்பீட் ஆடியன்ஸ் எங்க இருந்து வரது ?

    இதை விட பல மடங்கு செலவு பண்ணி. இதை விட சூப்பரா கிராபிக்ஸ் எல்லாம் செய்யப்பட்ட பெரிய பெரிய ஹாலிவுட் படங்கள், கதை திரைக்கதை சரியில்லாத காரனத்தால தோல்விய தழுவின வரலாறு நம்மளை விட ஷங்கர் அவர்களுக்கு கண்டிப்பாக தெரிஞ்சிருக்கும். இருந்தும் இவ்வளவு மோசமான அடிப்படை இல்லாத கதையும், அதுக்கு இவ்வளவு மோசமான திரைக்கதையையும் எழுதி, இவ்வளவு பணத்தை செலவு பண்ண ஷங்கர் அவர்களுடைய முட்டாள் தனம் தான் இந்த படத்தின் தோல்விக்கு காரணம்.

    பணம், வசூல் இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் ஷங்கர் இந்த படத்தின் தரத்திற்கு ஒரு திறமையான படைப்பாளியாக, மனசாட்சியோடு உடன்படுகிறாரா என்பதே நான் அவரின் முன் வைக்க நினைக்கும் கேள்வி. ஜென்டில்மேன், முதல்வன் – இந்த படங்களின் திரைக்கதை எழுதின ஷங்கர் தான் இந்த படத்தை எழுதினார் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
    ஷங்கர் தன்னோட கதை – திரைக்கதை குழுவை மறு பரிசீலனை பண்ண வேண்டிய நேரம் இது.

  2. அன்பரசன் says

    கட்டிக்கிட்டு எல்லாம் இருட்டுன்னு நீ கூவாத… கூவாதப்பா…

    வட்டம் போட்டுக்கிட்டு சின்ன உலகத்தில் நீ வாழாத… வாழத்தப்பா..

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 உலகம் முழுவதும் ரூ.700 கோடி வசூலைக் குவித்து வருகிறது. 700 கோடி என்கிற மைல்கல்லை தொட்ட முதல் தமிழ் படம் என்கிற பெருமையை அது பெற்றுள்ளது.. விநியோகஸ்தர்களுக்கு ரூ 110 கோடி ஷேர் தரும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் 550 கோடி வெளிநாட்டில் 150 கோடி முறையே வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதில் வட இந்தியாவில் மட்டும் இப்படம் 200 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் கேரளாவிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சுமார் 25 கோடிகளுக்கு மேல் அங்கு வசூல் செய்துள்ளது. இதன் மூலம் மெர்சலை பின்னுக்கு தள்ளி ஆல் டைம் நம்பர் 1 என்ற இடத்திற்கு வந்துள்ளது.
    தமிழகத்தில் மட்டுமே 10 நாட்களில் 180 கோடிகளைக் குவித்து வசூலில் முதலிடத்தில் உள்ளது 2.0. 2.0 சென்னையில் பாகுபலி2 சாதனையை முறியடித்துள்ளது. தொடர்ந்து தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டத்தை நிரப்பி வரும் இந்தப்படம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. 2.O 20.8 கோடி சென்னையில் மட்டுமே வசூல் செய்து இந்த சாதனையை உடைத்துள்ளது.
    அமெரிக்காவில் சுமார் 33 கோடி வரை 2.0 வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இதோ டாப் 10 லிஸ்ட்

    2Point0- $4.7M*
    கபாலி- $4.1M
    எந்திரன்- $2.4M
    காலா- $1.91M
    லிங்கா- $1.51M
    24- $1.47M
    மெர்சல்- $1.35M
    ஐ- $1.31M
    சிவாஜி- $1.30M
    விஸ்வரூபம்- $1.24M

    கட்டிக்கிட்டு எல்லாம் இருட்டுன்னு நீ கூவாத… கூவாதப்பா…
    வட்டம் போட்டுக்கிட்டு சின்ன உலகத்தில் நீ வாழாத… வாழத்தப்பா..

  3. Ramesh says

    சூப்பர்ஸ்டார் ரஜினியின் 2.0 படம் உலக அளவில் 11 நாளில் 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை பாக்ஸ் ஆபிஸில் 2.0 ஒரு புதிய சாதனையை செய்துள்ளது. 12வது நாள் வசூலோடு சேர்த்து 2.0 சென்னை வசூல் 21.03 கோடி ருபாய் வந்துள்ளது. இதன் மூலம் இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த பாகுபலி 2 படத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு வந்துள்ளது 2.0.

  4. ஜீவா says

    சூப்பர்ஸ்டார் ரஜினியின் 2.0 படம் உலகம் எங்கும் வசூல் மழை தான். எல்லா இடத்திலும் விநியோகஸ்தர்களுக்கு படம் லாபம் என்றே தெரிகிறது. மொத்தமாக பட வசூல் ரூ. 800 கோடியை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. இப்போது என்ன விஷயம் என்றால் ரஜினியின் 2.0 படம் தமிழ்நாட்டில் முக்கியமான ஏரியாக்களில் ஒன்றான செங்கல்பட்டில் மட்டும் ரூ. 38 கோடி வசூலித்துள்ளது.

  5. Albert says

    2.0 இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் படம். 2.0 உலகம் முழுவதும் 840 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாம். இதில் இந்தியாவில் மட்டும் இப்படம் 650 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் 2.0 தற்போது வரை 28 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. எப்படியும் இப்படம் 50 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

    Previous article
    சென்னை முழுவதும் 3 வார முடிவில் இத்தனை கோடி வசூலா 2.0, பிரமித்த சாதனை
    Next article
    விஜய்யின் பிரமாண்ட ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி, முன்ன இயக்குனர் அதிரடி
    RELATED ARTICLESMORE FROM AUTHOR
    பிரமாண்ட சாதனை படைத்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த 2.0! விபரம் உள்ளே
    அடுத்தடுத்து அதிரடி, விக்ரம் செம்ம முடிவு, ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்
    பெரியார் குத்து, இந்தியாவே அதிர்கிறது ஆப்போசிட் கதறுகிறது, சிம்பு மாஸ்
    விஜய்யின் பிரமாண்ட ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி, முன்ன இயக்குனர் அதிரடி
    கலைஞர் சிலை திறப்பு விழாவில் ரஜினிக்கு கிடைத்த முதல் மரியாதை, அவரே ராஜா
    அடுத்த சூப்பர்ஸ்டார் யார்? சீயான் விக்ரம் கூறிய கலக்கல் பதில்
    Follow Us on Facebook

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Maari 2 – Official Trailer (Tamil)

https://www.youtube.com/watch?v=ORZltL9glEA

Close