‘யாரை நம்பி நான் பொறந்தேன், போங்கடா போங்க’
‘யாரை நம்பி நான் பொறந்தேன், போங்கடா போங்க’ டைப்தான் அஜீத். இவருக்கு ஈக்குவல் லெவலில் இருக்கிற விஜய்யே கூட, ‘நம்ம படத்துல காமெடி யாருங்ணா…?’ என்று உஷாராக கேட்டு அதற்கேற்ப ஒரு ஆளை சிபாரிசு செய்வார். அண்மையில் வெளிவந்த தலைவாவில் கூட சந்தானம்தான் விஜய்யின் வெடி மத்தாப்பூவாக இருந்தார். தற்போது அஜீத் நடித்துவரும் வீரம் படத்தில் காமெடிக்காக சந்தானத்தையோ, சூரியையோ கேட்கலாம் என்று நினைத்தாராம் டைரக்டர் சிவா. ‘வேணாம்… ரமேஷ் கண்ணாவே போதும்’ என்று கூறிவிட்டாராம் அஜீத். ஒய்.ஜி.மகேந்திரன் மாதிரி அவரே ஜோக்கடித்து அவரே சிரித்துக் கொள்கிற அளவுக்குதான் இருக்கிறது ரமேஷ்கண்ணாவின் நகைச்சுவை திறமை. இதையெல்லாம் எடுத்துச் சொன்னாலும் கேட்கிற மூடிலா இருக்கிறார் அஜீத்? வேறு வழியில்லாத சிவா மனசுல இப்போ ‘சிவ சிவா’தானாம்.