ஒரு ட்விட்டு போட்டு 50 வருஷ உழைப்பை காலி பண்ணிடுறாங்களே! ராதாரவி கவலை!

மியாவுக்கு ஆசைப்பட்டவர்கள் எல்லாரும் மீ டூ வால் தாக்கப்பட்டு ஐய்யோ குய்யோவாகிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த மீ டூ வை தன் சொந்த பகைக்கும் ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது பலருக்கும். இதில் மாட்டியவர்கள் மிதிபட்ட அடுத்த நிமிஷமே, ‘அது நான் இல்ல. இல்லவே இல்ல’ என்று கூக்குரலிட்டாலும், எங்கிருந்தோ மீ டூ போட்ட புண்ணியவாதிகள் இந்த புலம்பலை கண்டு கொள்வேனா என்று இருக்கிறார்கள்.

தன் மீது சுமத்தப்பட்ட புகாருக்கு பிரஸ்சை கூட்டி விளக்கம் அளித்த நடிகர் தியாகராஜன், அதற்கு முன்னதாக பொன்னர் சங்கர் படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை திரையிட்டார். ஒரு மன்னரின் கோட்டையை பிரசாந்த் அன் பிரசாந்த் முற்றுகையிட்டு அங்கு சிறைபிடிக்கப்பட்ட தங்கள் காதலிகளை மீட்கிற காட்சி அது. பாகுபலிக்கு பக்கத்தில் நின்று பலே பலே என்றது அந்த காட்சி. நிச்சயம் அதற்கு பின்னாலிருக்கும் உழைப்பை நினைத்துப் பார்த்தால், அந்த நேரத்தில் இப்படத்தின் டைரக்டரான தியாகராஜன் சில்மிஷத்தை நினைத்துப் பார்த்திருப்பாரா என்கிற டவுட் வருகிறது.

அவரே அதைதான் சொல்கிறார். “முதல் நாள் மாலை கூடிய நாங்கள், ஆயிரக்கணக்கான ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கு பயிற்சி அளித்து அதை சரியாக எப்படி ஷுட் பண்ணுவது என்கிற முனைப்பில் இருந்தோம். அதுவும் முழு இரவு அந்த ஷுட்டிங் நடந்தது. அந்த பரபரப்பான நேரத்தில்தான் நான் அந்த பெண்ணின் ரூம் கதவை தட்டியதாக சொல்கிறார். என் மீது குற்றம் சொன்ன அந்த ப்ரித்திகா மேனனை நான் சும்மாவிடப் போவதில்லை. மான நஷ்ட வழக்குப் போடுவேன்” என்றார் கவலையோடு.

பாதிக்கப்பட்ட மனசுக்கு இன்னொரு பாதிக்கப்பட்ட மனசுதானே ஆறுதல்? இந்த பிரஸ்மீட்டுக்கு இதே மீ டூ வில் கிசுகிசுக்கப்பட்ட ராதாரவியும் வந்திருந்தார். நீங்க பாட்டுக்கு ரெண்டு வரியில் எழுதிட்டு போயிடுறீங்க? ஐம்பது வருஷ உழைப்பையும் கவுரவத்தையும் ஒரு நிமிஷத்தில் காலி பண்ணிட்டு போயிடுறீங்க? நீங்க சொல்றது நிஜம்னா போலீஸ்ல புகார் தரலாம். அதை விட்டுட்டு விளையாட்டா இப்படி எழுதிட்டு போறது சரியா. எங்களுக்கும் குடும்பம், பேரப்பிள்ளைகள் இருக்காங்க. அதை மறந்துடாதீங்க என்றார் கோபமாக!

இதெல்லாம் ஒரு நியூஸ்னு பெருசா பப்ளிஷ் பண்ற உங்கள மாதிரி மீடியாக்கள் முதல்ல யோசிக்கணும் என்று அடிஷனல் அட்வைசும் கொடுத்தார்.

தாளிக்கிற நேரத்துல நாலைஞ்சு கடுகு முகத்துல அடிக்கதான் செய்யும்? அதுக்கென்ன பண்றதாம்!

1 Comment
  1. Daniel says

    ராதாரவி ஒரு ரவுடி. கட்டப்பஞ்சாயத்து பேர்வழி. பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவன்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
யுவன் விஷயத்தில் இப்படி ஓப்பனா போட்டு உடைச்சுட்டாரே சுசீந்திரன்?

Close