இந்த செய்தியை படிப்பதற்கு முன் ஒருமுறை கெக்கே பிக்கே என்று சிரிக்கவும்!
இந்த செய்தியை படிப்பதற்கு முன் ஒருமுறை கெக்கே பிக்கே என்று மனம் விட்டு சிரித்துக் கொள்ளுங்கள். யானைக்கு வேண்டுமானால் தன் பலம் தெரியாமலிருக்கலாம். ஆனால் பூனை? தெரிந்து வைத்திருக்க வேண்டுமா இல்லையா? கோடம்பாக்கத்தில் பல பேர் தங்களை யானையாக நினைத்துக் கொண்டு கொடுக்கிற அலப்பறை இருக்கிறதே… தவுடை பொடியாக்கி தங்கம்னு வித்துடற அளவுக்கு இருக்கு அது!
ரஜினி, கமல், அஜீத், விஜய் படங்களை தவிர வேறு யார் படத்திற்கும் ராப்பகலாக கண்விழித்து அக்கறை காட்டப் போவதில்லை உலகம். அப்படியிருந்தும் சில நடிகர்களும் இயக்குனர்களும் தங்களுக்காக இந்த உலகம் கண்விழித்து காத்திருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு ட்ரெய்லர் வெளியிடுவதற்கு கூட பயங்கர பில்டப் கொடுக்கிறார்கள். அதுவும் நள்ளிரவு 12 மணிக்குதான் வெளியிடுவார்கள். உலகம் கண்விழித்து அதை பார்க்க வேண்டும்.
தொடர்ந்து தோல்விப்படங்களாக எடுத்து தள்ளும் வெங்கட்பிரபு சென்னை 28 படத்தின் செகன்ட் பார்ட் எடுக்கிறாராம். அதற்கு வந்த பில்டப் பாருங்களேன்… நள்ளிரவு 12 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவித்திருந்தார் அவர். ஒருத்தரும் அதை கண்டு கொள்ளவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அந்த ஆர்வ கோளாறுக்கு என்ன வைத்யம் செய்வது?
அதற்கு சற்றும் சளைத்தல்ல… இருமுகன் படப்பிடிப்பில் நடக்கும் அட்டகாசம். தனக்கென்று கூலிக்கு சில ஆட்களை நியமித்துக் கொண்டு இன்டர்நெட்டில் பயிர் பண்ணி வரும் விக்ரம்தான் இப்படத்தின் ஹீரோ. படப்பிடிப்பில் யாரும் செல்போன் எடுத்து பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாம். அதுபோல வெளியாட்கள் யாராவது ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போனால், செல்போனை வெளியிலேயே விட்டுட்டு போங்க என்கிறார்களாம். ஏன்? யாராவது விக்ரமின் கெட்டப்புகளை திருட்டுத்தனமாக படம் எடுத்து உலகம் முழுக்க பரப்பிவிட்டால் என்னாவது? அதனால்தான் இந்த கெடுபிடி.
அண்ணாத்தே… அதெல்லாம் ரஜினி, கமல், அஜீத், விஜய் படங்களுக்குதான் பொருந்தும். நீங்களே செல்பி எடுத்து, ‘பாருங்க பாருங்க’ என்று கூவி கூவி காட்டினாலும் விழுந்தடித்து பார்ப்பதற்கு முதல்ல ஆளிருக்கா பாருங்க!
What is your problem with Vikram?
Why these much of hatredness towards him?