அதிமுக வில் பிரபு! சிக்குமா சிவாஜி பேமிலி?

“யடேய்… கட்சி நடத்தணும்னா காசு செலவழிக்கணுமாம்ல? போங்கடாங்…” நடிகர் திலகத்தின் மைண்ட் வாய்ஸ் இப்படியாக இருந்தாலும், அவரும் கொஞ்ச நாள் தனிக்கட்சி கண்டார் என்பது கல்வெட்டில் பொறிக்க வேண்டிய சமாச்சாரம். ஆனால் அது டி.ராஜேந்தரின் லட்சிய திமுக விட படு மோசமான நிலைக்கு ஆளான வரலாறை நிகழ்காலமும் அறிந்திருக்காது. வருங்காலமும் தெரிந்து கொள்ளாது. “நம்ம குடும்பத்துக்கு கட்சி கிட்சியெல்லாம் ஆகாதுப்பா” என்று அவரது வாரிசுகள் வாசலில் தேங்காயை உடைத்து விட்டு, நிலைப்படியில் எலுமிச்சங்காயை தொங்க விட்டதுடன், தானுண்டு…. தங்கள் சினிமா கம்பெனி உண்டு என்று நேர்வழியில் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

பிரபுவுக்கு இப்போதும் பல லட்சங்களை கொடுத்து கேரக்டர் ரோலில் புக் பண்ணுகிறார்கள். அவரும் கண்ட படத்திலெல்லாம் நடித்து கேரியரை பொசுக்கிக் கொள்ளாமல், நல்ல ரோல் வந்தால் மட்டும் நடிக்கிறார். அவரது மகன் விக்ரம் பிரபு இன்றைய தேதியில் மார்க்கட்டபுள் ஹீரோ. குறைந்தது மூன்று கோடி சம்பளம் என்று சினிமாவின் ஆணி வேரில் பல் விளக்கிக் கொண்டிருக்கிறது பேமிலி. இந்த நேரத்தில்தான் அந்த அழைப்பாம்.

தேர்தல் நெருங்குகிற நேரத்தில், செல்லுமிடமெல்லாம் கூட்டம் சேர்க்க ஒரு கனவான், கண்ணியவான், நடிகர், நல்லவர் வேண்டுமல்லவா? இந்த இமேஜ் எல்லாம் பொருந்தி வரும் அருமையான நபரான பிரபுவை பிடித்திருக்கிறார்கள். தேர்தல் நெருங்குவதற்குள் அவர் அதிமுகவில் ஐக்கியமாகக் கூடும் என்கிறது அரசியல் வட்டாரம். அதை அவரது குடும்ப வட்டாரம் அனுமதிக்கிறதா என்பதுதான் இப்போதைய கொஸ்டீன் மார்க்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கருணாசை கை கழுவினாரா திருநாள் பட இயக்குனர்?

ஒரு பிளாஷ்பேக்கை சொல்லிவிட்டு இந்த செய்தியை சொன்னால், வெந்த சிக்கன்ல விரலை விட்ட எபெக்ட் கிடைக்கும்! சில மாதங்களுக்கு முன் வந்த வெளிவந்த ‘சிகரம் தொடு’ என்ற...

Close