வரி ஏய்ப்பு விவகாரம்! நடிகை அமலாபால் கைது!

துணை மாநிலமான பாண்டிச்சேரியில் பதிவு செய்யப்பட்ட சொகுசுக் காரை கேரளாவில் பயன்படுத்தி வந்த நடிகை அமலா பால், வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இதையடுத்து கடும் எரிச்சலுடன் ஒரு அறிக்கை வெளியிட்ட அமலாபால், ‘பாண்டிச்சேரி இந்தியாவுக்குள்ளதானே இருக்கு? வருமான வரி கட்ற எனக்கு எங்க வேணும்னாலும் கார் வாங்குற உரிமையும் இருக்கு. இதை சட்டப்படி எதிர் கொள்வேன்’ என்றார்.

தவளை தன் வாயால் கெட்ட கதையாக, இந்த சுட சுட அறிக்கையே அவருக்கு தடதட சங்கடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தனது பிடியை மேலும் இறுக்கிய போலீஸ், நேற்று விசாரணைக்கு அழைத்திருந்தது அமலாவை. பல மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பின், அமலாபால் கைது செய்யப்பட்டதாக அறிவித்தது.

இதையடுத்து கேரள சினிமாவில் மட்டுமல்ல, தமிழ்சினிமாவிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத் ஸ்டைலில் விஜய் சேதுபதி! என்னவாகும் மன்றங்கள்?

Close