அஜீத் ஸ்டைலில் விஜய் சேதுபதி! என்னவாகும் மன்றங்கள்?

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் கூட, வலிய இழுத்து வம்பில் மாட்டி விடுகிற ஊர் ஆச்சே? கடும் உஷாராக இல்லாவிட்டால் ஒரே ராத்திரியில் க்ளைமாக்ஸ் போர்டை கழுத்தில் மாட்டி விட்டாலும் ஆச்சர்யம் இல்லை. இதையெல்லாம் உணர்ந்த விஜய் சேதுபதி, தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களை அழைத்து செம டோஸ் விட்டாராம். இப்படியே போச்சுன்னா மன்றத்தை கலைச்சுருவேன் பார்த்துக்க… என்று கொதித்த பின்புதான் அடங்கினார்களாம் அவர்கள்.

என்னதான்யா பிரச்சனை?

சில வாரங்களுக்கு முன் எம்.ஜி.ஆருடன் விஜய் சேதுபதி நிற்பது போல போஸ்டரை உருவாக்கியவர்கள், அதில் வாழும் புரட்சித்தலைவர் விஜய் சேதுபதி என்று பட்டமும் கொடுத்துவிட்டார்கள். விஷயம் சற்று தாமதமாக தன் காதுக்கு வர, வந்ததே கோபம் மக்கள் செல்வனுக்கு. சம்பந்தப்பட்ட மன்றத்தை அழைத்து லெப்ட் ரைட் வாங்கிவிட்டாராம். நிறைய அன்பு செலுத்துறேன்னு இப்படி தேவையில்லாத வம்பை ஏன் விலைக்கு வாங்குறீங்க? என்று கடிந்து கொண்டவர் கடைசியாக சொன்னதுதான் வெடி சப்தம்.

“இப்படியே போச்சுன்னா நான் எல்லா மன்றத்தையும் கலைச்சுருவேன். அவ்ளோதான்…”

நல்லா நடிக்கிறார். நல்லா சம்பாதிக்கிறார். நல்லா வாழ விடுங்கப்பா…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சமுத்திரக்கனி நடித்த டபுள் மீனிங் படமா ஏமாலி?

Close