திருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்! புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா!

திக்கெட்டும் பரவிக்கிடக்கிற திருட்டு பாய்ஸ், இப்போது டிக் டாக்கிலும் குடி புகுந்துவிட்டார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு முன் நின்று அருவா சுற்றுவது, ஆஸ்பிடல் குளுக்கோஸ் பாட்டிலை அப்படியே குடிப்பது, நடக்கிற சாலையில் உருளுவது, நாலு பேர் சிரிக்கிற வகையில் புரளுவது என்று சில்லரைத் தனங்களாக செய்வதுதான் டிக் டாக்கின் ‘லைக்ஸ்’ ஏரியா. இதற்காக சீராட்டும் பாராட்டும் திட்டும் உதையும் வாங்குகிற இந்த பசங்களுக்கு இப்போது திருட்டும் கொள்ளையும் கூட பொழுதுபோக்கு லிஸ்ட்டில் சேர்ந்துவிடும் போல!

தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நடிகை பூர்ணா இப்போது கேரளாவில் முக்கிய நடிகை. அவருக்குதான் காதல் வலை வீசியிருக்கிறார்கள் இந்த கொள்ளைக் கூட்ட பாஸ்கள்! ‘துபாய்ல நமக்கு நகைக்கடை இருக்கு’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இளம் வாலிபன் ஒருவனிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்திருக்கிறார் பூர்ணா. பேச்சு பேச்சாக இல்லாமல் பேராசையாக மாறியிருக்கிறது. பெண்களின் வீக்னெஸ் எது என்று புரிந்து வைத்திருக்கும் இத்தகைய திருடர்களிடம் காலப்போக்கில் எக்கச்சக்கமாக சிக்கிவிட்டார் பூர்ணா.

‘பொண்ணு கேட்க வீட்டுக்கு வாங்க’ என்று அவர் அழைப்பு விடுக்க, வந்த ஆறு பேரில் சம்பந்தப்பட்ட நகைக்கடை அதிபர் இல்லவே இல்லை. ‘அத்தான் எங்க?’ என்று விசாரிப்பதற்குள், அத்தனை பேரும் டுபாக்கூர் என்று சட்டென்று புரிந்து கொண்டார் பூர்ணா. நைசாக பேசி அனுப்பிய பூர்ணாவின் குடும்பம் இப்போது போலீசுக்கு போக, ஆறு பேர் கும்பலை கொத்தாக தூக்கிவிட்டது போலீஸ்.

‘பூர்ணாவின் டெலிபோன் உரையாடலை வெளியிடுவேன்’ என்று சொல்லியே சில லட்சங்கள் பேரம் பேசப்பட்டதாம்.

முழுசு முழுசா ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரைக்கும் தினுசு தினுசா திருடுற கூட்டமும் இருக்கும். இதுல பூர்ணா மாதிரியான புத்திசாலி நடிகைகளும் சிக்கிக் கொள்கிறார்களே என்பதுதான் வேதனை!

கல்லு சும்மாதானே கிடக்குன்னு பல்லை போட்டு தேய்ச்சா கதையாவுல்ல இருக்கு?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அட கோமாளிகளா? கொதிக்கிறார் விக்னேஷ்சிவன்!

Close