அட கோமாளிகளா? கொதிக்கிறார் விக்னேஷ்சிவன்!
‘அலசி வச்ச துளசிச் செடி நெருஞ்சி முள்ளா குத்துதடி…’ என்பது போலாகிவிட்டது நயன்-விக்கி காதல். கோடம்பாக்கத்தில் கொள்ளை பேர் இந்த காதலை வெறித்தனமாக நோக்கிக் கொண்டிருக்க, அந்த வெறித்தனத்தை மேலும் ரத்த வெறியாக்கியது அந்த வதந்தி.
‘நயன்தாராவுக்கு கொரானோவாமே…’ என்பதுதான் அந்த பொல்லாத வதந்தீ. தங்கம் எப்படிய்யா துரு பிடிக்கும்? என்று விக்னேஷ் சிவன் சண்டைக்கு வரலாம். ஆனால் இந்த வதந்தியை ருசித்து ரசித்து கொண்டாடியது இதே கோடம்பாக்கம். வாட்ஸ் ஆப்புகளில் இந்த வதந்தியை காட்டுத் தீ போல பரப்பியதில் சினிமாக்காரர்களின் பங்குதான் அதிகம்.
ஆனால் அது அப்படியே அச்சு ஊடகத்திலும் அரங்கேறும் என்று எதிர்பார்க்கவில்லை விக்கி நயன் லவ் ஜோடி. சோஷியல் மீடியாவிலும் சுற்றி சுற்றி வந்தது விஷயம். பொறுத்து பொறுத்துப் பார்த்த விக்னேஷ்சிவன், ‘நல்லாதாம்யா இருக்கோம் நாங்க’ என்று கூறினார். அதேநேரத்தில், யாரெல்லாம் வதந்தி பரப்பினார்களோ… அத்தனை பேர் மீதும் கொதித்து கொந்தளித்தார்.
வதந்தியை உருவாக்கிய சினிமாக்காரர்களை விட்டுவிட்டு, அதை செய்தியாக்கிய ஊடகத்தின் மீது செம காண்டான விக்கி, அந்த கோப கொந்தளிப்போடு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுதான் இது.
இப்படித்தான் எங்களைப் பற்றிய, கொரோனாவைப் பற்றிய செய்திகளை, ஊடகத்தினரின், சமூக ஊடகத்தினரின் கற்பனைகளை நாங்கள் பார்க்கிறோம். எப்படியிருந்தாலும், எங்கள் நலவிரும்பிகளுக்கு, நாங்கள் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்கிறோம். அனைத்து கோமாளிகளையும், அவர்கள் கோமாளித்தனங்களையும் பார்க்க கடவுள் எங்களுக்குப் போதுமான வலிமையையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறார். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
‘சந்தடி சாக்குல நம்மள கோமாளின்னுட்டாரே…’ என்று மீண்டும் கொதிக்கிறது மீடியா. அவர்ட்டயே கேட்ருவோம்… என்று விக்கிக்கு போன் அடிப்பவர்களுக்கு, ‘நான் உங்கள சொல்லல’ என்று பதில் வருகிறதாம்.
‘எலி மூக்குல கட்டி வந்தா, அதை வட சட்டிதான் உடைச்சு விடணும்’. இந்த உண்மை தெரிஞ்சா ஏன் திட்டப் போறாரு விக்கி?