ஐயோ பாவம் அபிநயா! அவர் படத்துக்கும் சிக்கலாம்?

நாடோடிகள் படத்தில் அறிமுகமானவர் அபிநயா. இயல்பில் வாய் பேச முடியாத அந்த பெண்ணை படம் நெடுக வாய் துடுக்கான பெண்ணாக நடிக்க வைத்திருப்பார் சசிகுமார். இப்படியொரு பெண்ணை அப்படியொரு ரோலுக்குள் நினைத்துப் பார்த்ததே கற்பனைக்கும் எட்டாத விஷயம். அதையும் துல்லியமாக செய்த சசிகுமாரை எல்லா காலங்களிலும் பாராட்டலாம்.

கற்பூரம் போல எந்த கேரக்டரிலும் கரைந்து விடுகிற அபிநயாவும், டயலாக்குகளை படித்து அதற்கேற்ப உதடுகளை அசைத்து பிரமூட்டி வருகிறார். யார் யாருக்கோ ஸ்பெஷலாக விழா எடுப்பவர்கள் இந்த ஒரு திறமைக்காகவே அபிநயாவுக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கலாம். சரி போகட்டும்… விஷயத்திற்கு வருவோம். இவர் ஹீரோயினாக நடித்திருக்கும் அடிடா மேளம் என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. இன்னும் தேதியை முடிவு செய்ய முடியாதளவுக்கு ஒரு கட்டையை போட்டு வைத்திருக்கிறது சென்சார்.

இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்களாம். இந்த படத்தில் ஆபாசம் இல்ல. வன்முறை காட்சிகள் இல்ல. அப்படியிருந்தும் ஏன் யு/ஏ கொடுத்தாங்கன்னு தெரியல என்கிறார் இப்படத்தின் டைரக்டர் அன்பு ஸ்டாலின். ரிவைசிங் கமிட்டிக்கு போகலாமா என்றும் யோசித்து வருகிறார்களாம்.

அபய்கிருஷ்ணா அபிநயா ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை மாற்று திறனாளி அபிநயாவுக்காகவாவது க்ளீன் யு கொடுத்து ரிலீஸ் பண்ணலாமே சென்ஸ்(லஸ்)சார்ஸ்…?

1 Comment
  1. Arul says

    Nadodigal director Samuthira kani thaana?? Credit should goes to him only.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Yenru Thaniyum Movie Stills

Close