அஜீத் மீது வீசுவதற்கு அடுத்ததாக ஒரு கல்!

பார்க்காதே… பேசாதே… கேட்காதே…. என்று காந்தி பொம்மை ஆகிவிட்டார் அஜீத்! (அவர் மட்டுமா, அவரைப்போல பல ஹீரோக்கள்) ஒருவகையில் அதுதான் நிம்மதி. நல்லது. அப்படியே பேஸ்புக் பார்க்காதே, ட்விட்டர் பக்கம் போகாதே, வாட்ஸ் ஆப்பில் மேயாதே என்றும் கூறியிருப்பார் காந்தி. நல்லவேளை… இந்த கண்றாவிகளுக்கு முன்பே அவர் போய் சேர்ந்துவிட்டார்.

தமிழ் சினிமா பிரபலங்கள் யாராவது இறந்துவிட்டால், இறந்தவரை அடக்கம் செய்வதற்குள் செல்ஃபி எடுத்துவிட வேண்டும் என்று கூடுகிற ஒரு ரசிகர் கூட்டம், வருகிற போகிற கொட்டாச்சி, சிசர் மனோகர், வையாபுரி கோஷ்டிகளை கூட விட்டுவைப்பதில்லை. அதிலும், அஜீத் விஜய் மாதிரியான டாப் ஹீரோக்கள் வந்தால்? தொலைந்தார்கள். மேலே விழுந்து பிராண்டி நகக் கீறல் ஏற்படுத்தாமல் அவர்களை அனுப்புவதேயில்லை. கருமாதி செத்தவருக்கு. ஆனால் காயமெல்லாம் எனக்கா? என்று அஞ்சுகிற ஹீரோக்களில் பலர் இந்த ஒரு காரணத்திற்காகவே அந்தப்பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை.

இருந்தாலும், பேஸ்புக் வாட்ஸ் ஆப் போராளிகள், “அதெப்படி நீ வராம போவே? உனக்கெல்லாம் ரத்தம் ஓடுதா, இதயம் துடிக்குதா?” என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கதற விட்டுவிடுகிறார்கள். அப்படியாப்பட்ட பேராளிகளுக்கு இதோ ஒரு பொன்னான சந்தர்ப்பம். எங்க எடுங்க பார்க்கலாம் அஸ்திரத்தை?

பிரச்சனை என்னய்யா… அதைச் சொல்லு முதல்ல?

அஜீத்தை அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்திய டைரக்டர் செல்வாவின் மனைவி நேற்று காலமானார். அவரது இறுதி சடங்குக்கு அஜீத் வரவில்லை. போதுமா… போதுமா…?

2 Comments
  1. roja says

    என்று அஞ்சுகிற ஹீரோக்களில் பலர் இந்த ஒரு காரணத்திற்காகவே அந்தப்பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை?
    வாவ் ஒரு இறுதி சடங்குக்கும் போக வேண்டாம் என்று சொல்லுங்கோ உங்க தலையை. பாவம் எல்லோரும் அவரை பாக்க வந்திடுவாங்கோ
    பல விடயங்களை உடனே நெகடிவ் ஆக எழுதும் நீங்கள் இந்த விடயத்துக்கு ஏன் இத்தனை buildup ஓ தெரியல.
    உங்கள் “””தலை””யாய பணி தொடரட்டும்.

  2. Tamilselvan says

    AJITH IS USELESS GAY., NOT GUY.
    AJITH IS SELFISH GAY

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தயாரிப்பாளர்கள் நெருக்கடி! கலையரசனுக்கு கொசுக்கடி!

ஆடி போயி ஆவணி வந்தா டாப்பா இருக்கலாம் என்று நினைக்கும் பல ஹீரோக்கள், தங்கள் சுய சுழியாலும், சொல்லொணா அலட்டலாலும், ஆடி போய் என்ன? ஆவணி புரட்டாசி ஐப்பசி...

Close