தயாரிப்பாளர்கள் நெருக்கடி! கலையரசனுக்கு கொசுக்கடி!
ஆடி போயி ஆவணி வந்தா டாப்பா இருக்கலாம் என்று நினைக்கும் பல ஹீரோக்கள், தங்கள் சுய சுழியாலும், சொல்லொணா அலட்டலாலும், ஆடி போய் என்ன? ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை போனாலும், ‘ராவு காலம்’ பின்தொடர தொடர ஓடிக் கொண்டிருப்பார்கள். அப்படியொரு ராவு கால எபெக்டுக்கு ஆளாகியிருக்கிறார் திருவாளர் கலையரசன்.
மதயானை கூட்டம் படத்தில் அறிமுகமான இவரை, தமிழ்சினிமாவின் நம்பிக்கை நாயகனாக வருவார் என்று பத்திரிகைகள் பாராட்டின. அதை நிரூபிப்பது போலவே பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தில், பிரமாதப்படுத்தியிருந்தார் அவரும். அதற்கப்புறம் அவர் நடித்து வெளிவந்த சில படங்கள், பஞ்சரோ பஞ்சர். இத்தனைக்கும் அவரது சமீபத்திய படமான ராஜா மந்திரி கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய படமும் கூட. ஆனால் விறகுல மழை பெய்ஞ்சுட்டா விரசா பத்தாது அல்லவா? அப்படிதான் ஆகியிருந்தார் அவர். தன்னை நாடி வருகிற தயாரிப்பாளர்களுக்கெல்லாம் அவர் சொன்ன ஒரே பதில், “கபாலியில் ரஜினிக்கு ஈக்குவலா ஒரு கேரக்டர்ல நடிச்சுட்டு இருக்கேன். சம்பளத்தை அப்புறம் பிக்ஸ் பண்ணலாம். ‘இப்போதைக்கு நாற்பதுன்னு வச்சுப்போம். படம் வெளிவந்த பின் என்னோட பர்பாமென்ஸ் புடிச்சுருந்தா அதை அறுபதாக்கி கொடுங்க” என்றே கூறிவந்தார்.
இதையும் நம்பிய சில தயாரிப்பாளர்கள் நாற்பது என்று சம்பளத்தை முடிவு செய்து, அட்வான்சும் கொடுத்திருந்தார்கள். கபாலி வந்ததும்தான் தெரிந்தது… அவருக்கு தினேஷை விட குறைவான ரோல் என்று. இன்னும் சொல்லப் போனால் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல அங்கும் இங்கும் நடமாடிய அவரை நம்பி இவ்ளோ பணத்தை சம்பளமா பேசிட்டமே என்று மனம் நொந்தவர்கள், தம்பி உங்களை வச்சு படம் பண்ணுற எண்ணத்தையே டிராப் பண்ணிட்டோம். அட்வான்சை திருப்பி தர்றீங்களா என்கிறார்களாம்.
ரஜினி படத்தில் ரஜினிதான் சார் மலை! மற்றதெல்லாம் கூழாங்கல் என்று தெரிந்திருந்தும், கபாலி வரட்டும். சம்பளம் பிக்ஸ் பண்ணிக்கலாம்னு சொன்னீங்களே…இப்ப சரியா மாட்டுனீங்களா?
ஓ இவருக்கு 40 லட்சம் வரைக்கும் சம்பளம் கொடுக்குற கூமுட்டைகள் இருக்கா!