அந்த விஷயத்தில் அஜீத்தும் விஜய்யும் ஒண்ணு!

ஒரு படத்தில் பாடல்கள் நன்றாக அமைந்துவிட்டால் போதும். அரை கிணறை தாண்டியாச்சு என்று அர்த்தம்! வெறும் பாடலுக்காகவே ஓடிய படங்கள் என்று தமிழ்சினிமாவில் லிஸ்ட் போடுவதற்கு ஏராளமான படங்கள் உள்ளன. இப்படி பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரசிகர்கள், தங்களின் மனசுக்கு பிடித்த ஹீரோக்களின் பட அறிவிப்பில் முதலில் பார்ப்பதே “யாருய்யா இந்த படத்துக்கு மியூசிக்?” என்பதைதான்!

‘அண்ணாமலை’ படத்திற்கு தேவா இசை என்றதும், ரஜினி வீட்டுக்கு ரத்தக்கடிதம் எழுதியவர்களெல்லாம் இன்னும் கூட இருக்கிறார்கள். தலைவா… அவரு எதுக்கு? என்று கேட்டுதான் அந்த கடிதங்கள். ஆனால் அப்படி எழுதிய ரசிகர்களையே தாளம் போட்டு ரசிக்க விட்டார் தேவா.

சரி… மேட்டருக்கு வருவோம். விஜய் பட பாடல்களுக்கு தனி அட்ராக்ஷ்ன் வரக் காரணம், அந்தந்த படங்களின் டைரக்டர்கள் மட்டும் அல்ல. விஜய்யும்தான். ட்யூன் அவருக்கு பிடிக்காவிட்டால், அதற்கப்புறம் வண்டி இம்மியளவுக்கு கூட நகராது. வேற… வேற… என்று ட்யூனை மாற்றிக் கொண்டேயிருப்பார் அவர். திருப்தியான பின்புதான் அதற்கு பாடல் எழுதி ரெக்கார்டிங்குக்கே போகும்.

இப்போது அந்த ஸ்டைலை பின்பற்ற ஆரம்பித்துவிட்டார் அஜீத்தும். டைரக்டருக்கு பிடித்திருந்தால் கூட, அஜீத்திற்கு பிடித்திருந்தால்தான் அடுத்த கட்ட மூவ். இல்லேன்னா இல்லேதான். ‘ஆலுமா டோலுமா’ இன்று உலகம் முழுக்க தமிழ் தெரியாத நாடுகளில் கூட பேமஸ் ஆனதற்கு காரணம், பல ட்யூன்களுக்கு பின் கடைசியாக இதை ஓ.கே பண்ணிய அஜீத்தின் கால்குலேஷன்தான்.

இப்போது அஜீத்தின் மண்டையை கழுவி ட்யூனை ஓ.கே பண்ணுவதற்கு நடையாய் நடக்கிறாராம் அனிருத். விவேகம் படத்தில் வரப்போகும் அஜீத்தின் ஓப்பனிங் சாங்குக்காகதான் இத்தனை மெனக்கெடல்!

1 Comment
  1. சேரன் says

    ரெண்டு பேருமே சுயநலவியாதிகள் தான். அப்பாவி தமிழ் சினிமா ரசிகனை ஏமாற்றி கல்லா கட்ட தெரிந்தவர்கள்.

Leave A Reply

Your email address will not be published.