இந்தி, தெலுங்கு, தமிழ் ஒரேநாளில் வெளியிடப்படுகிறதா விவேகம்?
அஜீத்தை ஆல் லாங்குவேஜ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பதற்கான கல்வெட்டுகளை தயார் செய்ய ஆரம்பித்துவிட்டது தமிழ்சினிமா! விஜய் போல தெலுங்கு ஏரியாவிலோ, கேரள ஏரியாவிலோ அஜீத் பேமஸ்தானா என்றால், “ஒரு சுண்டல் பொட்டலம் எப்படியய்யா சோத்துப் பொட்டலம் ஆகும்?” என்ற கேள்வியும் வரும். இருந்தாலும் ‘வேதாளம்’ படத்திற்கு பிறகும் ‘ஆலுமா டோலுமா’வுக்கு பிறகும் அஜீத்தின் பரிபாலனம் அண்டை மாநிலங்களுக்குள்ளும் ஸ்டிராங்காக பரவி விட்டதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.
விவேகம் படத்தை மொத்தமாக பர்சேஸ் பண்ணும் எண்ணத்துடன் காத்திருந்த பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு போட்ட கண்டிஷன் பெருத்த ஷாக்கை கொடுத்துவிட்டது. ஒருவேளை அப்படியொரு மொத்த கொள்முதலுக்கு தடையில்லா விட்டாலும் தனித்தனி ஏரியாவுக்கு தானே விற்பனை செய்யும் முடிவில்தான் இருந்தது சத்யஜோதி நிறுவனம். இந்த நிலையில்தான் தமிழில் படம் வெளியாகும் ஆகஸ்ட் 10 ந் தேதி, இந்தி, தெலுங்கு, ஆகிய மொழிகளிலும் படத்தை டப் செய்து அதே நாளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
கேரளா, கர்நாடகா ஏரியாக்களில் அஜீத் தமிழ்தான் பேசப் போகிறார். இப்படி பல்வேறு மாநிலங்களில் முதல் முறையாக ஒரே நாளில் அஜீத்தின் படம் வெளியாகவிருப்பதால், திரையிடும் ஸ்கிரீன்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தொட்டாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள்.
ஆயிரம் ‘பிறை’ கண்டவர்களை வணங்குவது உலகத்தின் வழக்கம். ஆயிரம் ‘திரை’ கண்ட அஜீத்தை வணங்குவதை விட வாழ்த்துவதுதானே முறை!
https://youtu.be/QMSuVRnDwY8