கட்டுப்பாடு இல்லாத அஜீத் ரசிகர்கள்? காயலாங் கடைக்குப் போகுது கவுரவம்!

அஜீத் வர மாட்டார் என்பதற்காகவே அவர் போகாத இடத்தை ‘போக்கற்ற’ இடமாக்குகிற கொடுமை, இனி வரும் காலங்களிலும் நீடிக்கும் போல தெரிகிறது. நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஒரு கட்டி சுண்ணாம்பு கூட என் கையால் தர மாட்டேன் என்று இருக்கும் அஜீத்திற்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் பொங்குவது ஒன்றும் தப்பில்லை. அது அவர்கள் தன் தலைவரிடம் கொண்டிருக்கும் பாசத்தின் வெளிப்பாடு. அதற்காக விஷால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளை தொடர்ந்து கேவலப்படுத்தி வருவதும், நடிகர் சங்கம் நிதி திரட்டும் செயலை, ஏதோ திருடக் கிளம்பிவிட்டார்கள் என்பது போலவும் சித்தரிப்பதை எங்கு போய் சொல்வது?

நடிகர்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது என்பதை சமீபகாலங்களில் சற்று அழுத்தமாகவே நினைவூட்டி வருகிறார் விஷால். சென்னையில் வெள்ளம் வந்த நேரத்தில், மதுரையிலிருந்தவர் படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு சென்னைக்கு ஓடி வந்ததையும், வெள்ளம் வடிகிற வரைக்கும் சுற்றி சுற்றி பணியாற்றியதையும் மனசாட்சி உள்ள ஒருவரும் மறுக்க முடியாது. தஞ்சை விவசாயி ஒருவருக்கு பிரச்சனை என்றதும் அந்த கடனை நான் அடைக்கிறேன் என்று முதலில் குரல் கொடுத்தவர் விஷால்தான். (மார்க்கெட்டில் முப்பது கோடி நாற்பது கோடி சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் என்ன செய்தார்கள் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. தானாக விளங்கும்) இத்தனைக்கும் விஷால் சொந்தப்படங்கள் தயாரித்த வகையில் அவருக்கு 30 கோடிக்கும் மேல் கடன் இருப்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

போகட்டும்… பிரச்சனை அதுவல்ல. நடிகர்கள் கூடி அவர்கள் முயற்சியில் ஒரு செயற்கரிய செயலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதை கெடுக்கிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிற கும்பல் ஒன்று, விஷாலும் நாசரும் பிச்சையெடுப்பது போல ஒரு புகைப்படத்தை சித்தரித்து அதை சமூக வலை தளங்களில் பரப்பி வருகிறார்கள். இன்னும் கொடுமையாக, விஷால் புகைப்படத்துடன் ஒரு போஸ்டர் அடித்திருக்கிறார்கள். அதில் ‘சரிந்தது எழவு’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த அநாகரீகமான போக்கு கண்டிக்கத்தக்கது. ஆனால் கண்டிக்க வேண்டியவர்தான் ரிமோட் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாரே?

7 Comments
 1. Roja says

  I think you guys need to release the statement not compelling anyone to attend-actors.
  These all mid communication I think. Continue your good work

 2. விவேக் காயாமொழி says

  தேவையில்லாமல் அஜித்தை டார்கெட் செய்வது இவர்கள் தான். சுய விளம்பரம் தவிர வேறு ஒன்றும் இல்லை. பரபரப்பான நிகழ்வு ஆகிவிட்ட தஞ்சை விவசாயிக்கு பணம் தருவதாக சொன்ன நடிகர் சங்க செயலாளரை(உண்மையில் கொடுத்து காமெடி கருணாகரன் தான்), அன்றாடம் வறுமையில் வாடும், சாகபிழைக்க இருக்கும் நலிந்த நாடக கலைஞர்களுக்காக ஏதாவது செய்ய சொல்லுங்கள். அதனை விடுத்து அரசியலுக்கு போகவேண்டும் என்றால் சங்க பதவியை விட்டு விட்டு கட்சி ஆரம்பிக்கலாம்.
  அதைவிட்டு விஜய் விரட்டி அடித்த ஜெயசீலன் பேச்சை கேட்டு விஜய்யை சீண்டி (எல்லாருக்கும் தெரிந்து இருக்கும்) அது பலனலிக்காததால் அஜித்தை டார்கெட் செய்வது மூடத்தனம். அவர் தெளிவாக உணர்த்திவிட்டார் எந்த பொது நிகழ்வுக்கும் வருவதில்லை என்று.
  விஜயகாந்த் காலத்திலேயே மலேசிய, சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.வற்புறுத்தல் வந்த பிறகும்.ஆனால் அவருடைய பங்களிப்பாக எவ்வளவு பணம் கொடுத்தார் என சரத்குமார் சொல்லியிருக்கிறார்.
  அரசு மிரட்டி பாராட்டு விழாவிழாவிற்கு அழைத்த போது முதல்வர் முன்பே தைரியமாக விமர்சித்து,அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளை தனியாக (ரஜினி உதவியோடு) எதிர்கொண்டார்.
  அவர் எதுவும் சொல்லாத போது அவரை ஏன் விமர்சிக்கிறீர்கள்?
  யார் இந்த கும்பகோணம், மதுரை, சிவகாசி ரசிகர்கள்? இதற்கு என்ன ஆதாரம்? போட்டோ ஷாப்ல் எதுவும் செய்யலாம்.நான் சொல்கிறேன் இது விசாலே தான் பிரபலமாக,தனக்குத் தானே செய்த செயல் என்று.
  நீங்கள் எப்படி மறுப்பீர்கள்?
  அஜித்க்கு மன்றம் இல்லை, அவர் கலைத்ததே இது போல சில பிரச்சினைகள் காரணமாக தான்.
  அதனால் அவரை குற்றம் சொல்லி விளம்பரம் தேடுவோர்க்கு ஒன்று சொல்லிகொள்கிறேன்.
  அஜித் க்கு எதிரியாக இருக்க வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு தகுதி வேண்டும்.
  இத்தகைய செயல்களை நிச்சயமாக அஜித் ரசிகர்கள் செய்ய மாட்டார்கள்.

 3. roja says

  We can do what we want to do.No one is forcing thats’ all.
  Go n watch or watch in TV or off the TV and sleep.

 4. roja says

  அஜித் ரசிகர் மன்றம் இல்லை என்பது சரி .ஆனால் ஒரு ஸ்டார் நடிகர் தன்னை பத்தி செய்தி வரும் போது,மறுப்பு தெரிவுப்பது தான் முறை .
  இதுவே தன்னை பற்றிய Negative செய்தி என்றால் இப்போ மறுப்பு தெரிவித்து இருப்பார் .
  ஈழ பிரச்னையில் உண்ணாவிரதத்துக்கு வந்து பிரச்னையை பத்தி கதைக்காமல் தன்னை பத்தி விளக்கம் கொடுதர்வர் அஜித்.
  இதுக்கு அவர்ருக்கு சம்மதம் இல்லை என்றாலும் அவரின் பெயர் என்னவே நிட்சயம் ஆக விளக்கம் கொடுக்க வேண்டும்.
  பொது பிரச்னையில் கலந்துக விருப்பம் இல்லை ஏன் என்றால் சுயநலம்
  கருனதிதி இயடன் போஒய் மன்னிப்பு கேட்டது எல்லோருக்கும் தெரியும்.
  தான் உண்டு தனது வாழ்க்கை என்று எல்லோராலும் இருக்க முடியும் ஆனால் சேர்த்து செய்யும் போது பிரச்சனை வரும்.நடிகர்களுக்கும் சமூக பொறுப்பு வேணும்.
  நடிகர்கள் உண்டியல் எடுத்துக்கொண்டு நம் வீட்டு வாசலில் நின்று காசு கேட்கவில்லை. எனக்கு தெரிந்த வரை ஒருநடிகனின் வேலை நம்மிடம் காசு வாங்கிக்கொண்டு நம்மை மகிழ்விப்பது தன். அப்படிப் பார்த்தால் அவர்கள் நடத்தும் இந்தகிரிக்கேட் போட்டியும் அப்படி தன். அதை ஒரு சினிமா போல நினைத்துப் பிடித்து இருந்தால் பாருங்கள். பிடிக்காவிட்டால்விட்டுவிடுங்கள். இதில் கொந்தளிக்க ஏதும் இல்லை.

  அமைதி எல்லா நேராமும் உதவாது .பெரிய இடத்தில இர்ருகும் நடிகர் வெளியே வந்து பேச வேண்டும்.

  1. விவேக் காயாமொழி says

   அதைத்தான் சொல்கிறேன்..
   அவர் மேடையில் போட்டு உடைத்து, பிறகு முதல்வரை சந்தித்து மன்னிப்பு கேட்டாரோ,விளக்கம் அளித்தாரோ?
   அந்த சால்ரா சங்கம் என்ன செய்தது அதற்கு?
   தயாரிப்பாளர் சங்கம் அப்போது ரெட் கார்ட் போட்டதே? அதை சங்கம் கேட்டதா?
   இதனையெல்லாம் அவர் அனுதாபம் தேட உபயோகித்து கொள்ளவில்லை.
   அப்போதும் இப்போது போலவே அமைதியாகத்தான் இருந்தார் எந்த விளக்கமும் சொல்லாமல்.
   அதற்கு முன்பே வாலி சமயத்தில் பெப்சி பிரச்சினயில் தொழிலாளர் பக்கம் ஆதரவு அளித்த போது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் போட்டது.
   இதே ஏ.எம்.ரத்தினம் அவர்கள் அஜித் க்கு கொடுத்து இருந்த முன்பணத்தை திரும்ப கேட்டார்.
   அப்போதும் அஜித் கலங்கவில்லை, எந்த சங்கமும் அவருடன் இல்லை.
   எப்படி கிரிக்கெட் ஐ வந்து பார்ப்பதும், பார்க்காததும் மக்கள் விருப்பமோ அதே போல வருவதும், வராததும் அஜித் விருப்பம்.
   கட்டாயப்படுத்த தேவையில்லை.

   1. roja says

    என்னக்கு தெரிந்த மட்டும் ஒருவரையும் கட்டாய படுத்தவில்லை கேட்டார்கள் என்பது தான் உண்மை.இதில் போகவிருபம் இல்லை என்றால் மற்டவர்கள் சொன்னமாதிரி வேறு காரணம் சொல்லி இருக்கலாம்.
    பழைய நிறுவகம் பிழை விட்டது என்பதட்ட்காக ….
    அஜித் பாதிக்க பட்டது உண்மை அர்னால் பழிவாங்குவது நல்ல மனிதனுக்கு அழகு இல்லை.ஒருவரையும் கட்டாய படுத்தவில்லை என்பது உண்மை .
    வந்தால் நல்ல இர்ருக்கும் என்று தான் கேட்டிருப்பார்கள் .
    ஒன்றை மட்டும் உண்மை மீடியா இதை வைத்து நல்லா pulicity தேடுது .

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பாலா பேசட்டும்… கருத்து சொல்ல முடியாது! பாரதிராஜா பதில்!

“ஏன்... அவருதான் உணர்ச்சிவசப்படுவாரா? எங்களுக்கெல்லாம் உணர்ச்சி வராதா? புழு பூச்சியெல்லாம் கூட உணர்ச்சிவசப்படுது. அவரு பேசுனா நானும் பதிலுக்கு பேசுவேன்” என்று வேட்டியை மடிச்சு கட்டிவிட்டார் பாலா....

Close