ஓய்வுக்காக வெளிநாடு? திட்டத்தை மாற்றிய அஜீத்!
எடைதாங்க முடியாத சந்தோஷம் ஒருபக்கம்! வலி தாங்க முடியாத கால் மறுபக்கம் என்று அஜீத் இப்போ டபுள் ஆக்ட் பேபி. சந்தோஷத்திற்கு காரணம் சொல்லவே தேவையில்லை. அஜீத் படங்களின் முந்தைய ஹிட்டுகளை அவரே முறியடிக்கிற அளவுக்கு அமைந்துவிட்டது வேதாளம் கலெக்ஷன். உலகம் கண்களை விரித்து ஆச்சர்யப்பட்டது அந்த ஹிட்டை பார்த்துக் கூட அல்ல. தமிழ்நாடே மிதக்குற அளவுக்கு மழை. இவ்வளவு மழையிலும் வேதாளம் தியேட்டர்கள் புல் ஆனதே… அதை நினைத்துதான்!
அவர் முன்பு போல நடந்து வரவும் ஓடவும் குதிக்கவும் இன்னும் முழுசாக ஐந்து மாதங்களாவாவது ஆகும் என்கிறது யூகங்கள். நடுவில் அவர் ஓய்வுக்காக லண்டன் செல்வதாக இருந்தாரல்லவா? அந்த எண்ணம் இப்போது மாறிவிட்டதாம். எங்கும் செல்ல வேண்டாம். சென்னையிலேயே இருக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம். நடை பயிற்சி, பிசியோதெரபி, மருத்துவர்கள் வருகை என்று எல்லாவற்றுக்கும் சென்னைதான் பெஸ்ட் என்பதால் மட்டும் இப்படியல்ல.
சினிமா சாராத அவரது நட்பு வட்டாரம் ஒன்றும் சென்னையில் இருக்கிறது. அவர்களை தினந்தோறும் சந்திப்பதும் இந்த வெளிநாட்டு பயணத்தால் கெட்டுப் போகுமே? அதனாலும்தானாம்!
எனிவே… நீலாங்கரையை சுற்றி இப்போதும் கழுகு கண்களோடு திரியும் அவரது ரசிகர்களின் ஒரே குறி, தல முகம் எங்காவது தென்பட்றாதா என்பதாகவே இருக்கிறது. அதுக்கெல்லாம் இன்னும் ஒரு மாசமாவது ஆகும் ராசாங்களா….!