ஷங்கர்- அஜீத்- ஐஸ்வர்யாராய் கோலிவுட் மார்க்கெட்டில் கொலக்குத்து

வீரம் படத்தின் வெற்றிக்கு பிறகு அஜீத் மீண்டும் சிறுத்தை சிவாவுக்கு ஒரு படம் கொடுக்கப் போவதாக ஊரேல்லாம் பேச்சு. அவரோ, அஜீத்தை இயக்கியாச்சு. அப்படியே விஜய்யையும் இயக்கிவிட்டால், பெரிய சாதனையாளர் வரிசையில் இடம் கிடைத்துவிடும். தனது தொழில் விஷயத்தில் ஒரு முழுமையான மனநிறைவை பெற்றுவிடலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார். ஆனால் விஜய் படம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அஜீத் மீண்டும் கால்ஷீட் கொடுத்தால் அவரோடு கிளம்பிவிடுவது என்கிற கமர்ஷியல் சிந்தனையும் அவர் மனதிலிருந்தது.

இப்போது எல்லாம் கொலாப்ஸ். அண்மையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும், அஜீத்தும் சந்தித்திருக்கிறார்கள். அப்போது அஜீத்திற்கு நாலு வரியில் ஒரு கதையை சொன்னாராம் ஷங்கர். பொதுவாக ஷங்கர் அழைக்கிறார் என்றால், கதையாவது மண்ணாவது என்று கிளம்பி போய்விடுவார்கள் யாராக இருந்தாலும். அஜீத்தும் கிட்டதட்ட அந்த மனநிலையில்தான் இருந்தார். ஆனால் அதையும் தாண்டி ஷங்கர் கதை சொல்லி ‘எப்படியிருக்கு?’ என்று கேட்டால் என்னவென்று சொல்வது? ஆஹா… என்று கூறிவிட்டாராம் அஜீத்.

இந்த படத்தில் நடிப்பதற்காக அஜீத் நெஞ்சார சம்மதம் தெரிவித்ததில் இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று இது ஷங்கர் படம். இன்னொன்று படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நடிக்கப் போவது ஐஸ்வர்யாராய். முழு கதையும் வெளிநாட்டில் படமாக்குவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். மிக மிக ரகசிய தகவல்… இப்படத்தில் வில்லியாகவும் நடிக்கிறாராம் ஐஸ். படத்தில் அஜீத்திற்கு இரண்டு வேடங்களாம்.

பொறி பறக்குதே…

Ajith to team up with director Shankar?

Ajith’s stars shine brighter now as he is linked to almost all the popular directors of Kollywood after the phenomenal success of Arrambam and Veeram. It is learnt now director Shankar and Ajith met recently when Shankar narrated a four line story. Normally when director Shankar makes an offer to a hero, no one bothers to know about the script. However Shankar narrated a four liner and asked Ajith if he has liked it. Ajith immediately responded positively to the director. It is heard that there are two vital reasons for his consent. One it is director Shankar’s film, and the next one, he would be paired with Aishwarya Rai Bachchan in the film. Incidentally Ajith had earlier worked with her as co-star in Kandukondein Kandukondein.

Scoop:

Ash will also be seen in negative shade in the film with Ajith too donning a dual role.

2 Comments
  1. Ramjai says

    Thala thalathan

  2. ramesh says

    ivinga podarathula one percent kooda unma erukirathu ila….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நெடுஞ்சாலை பிரஸ் மீட்

Close