மீண்டும் அஜீத்! நெருக்கிப் பிடிக்கும் சத்யஜோதி!

உரிச்சு வச்ச வாழைப் பழமும், நறுக்கி வச்ச கொய்யாப் பழமும் ஒன்றல்ல! ஆனால் பல்லுக்கு சுவை. வயிற்றுக்கு இதம் என்ற வகையில் இரண்டும் ஒன்றுதான்! கிட்டதட்ட அப்படியாகிவிட்டது சத்யஜோதி, அஜீத் இருவரது காம்பினேஷன்! ‘விவேகம் திராபைதான். பரவாயில்லை. விஸ்வாசம் வயிற்றுக்கு நல்லது என்று நினைத்த சத்யஜோதி, அடுத்த படத்தையும் எனக்கே கொடுங்க’ என்று ஆர்வம் காட்டியதுதான் அஜீத் என்ற மாயப் பிசாசின் மகத்துவம்.

அதற்கப்புறம் வினோத் குமார் இயக்கத்தில் அஜீத் நடிப்பதாக இருந்த படத்தை போனிக்கபூர் தயாரிப்பதாக திட்டம். அதில்தான் ஒரு அதிரடி மாற்றம். திடீரென வினோத் குமார் விக்ரமுடன் இணைந்து விட்டார். போனிகபூர் தயாரிக்கிற படத்தின் இயக்குனர் இவரல்ல. வேறு யாரோ. நிலைமை அப்படியிருக்க… “வினோத்தை ஏன் விடணும்? பேசாம நான் அவருக்கு அட்வான்ஸ் தர்றேன். நீங்க அவருக்கு கால்ஷீட் கொடுங்க. அந்தப்படத்தை நானே தயாரிக்கிறேன்” என்றாராம் சத்யஜோதி தியாகராஜன்.

தயிரை கடைந்து வெண்ணை எடுக்கிற நேரத்தில் முடிவெடுப்பவரல்ல அஜீத். மலையை குடைந்து கிரானைட் எடுக்கிறளவுக்கு நேரம் வேண்டும். யோசித்துக் கொண்டிருக்கிறாராம்!

2 Comments
  1. Vijay says

    தொடர் தோல்வி நாயகன் அஜித் . இனி அவன் படம் ஓட வாய்ப்பு இல்லை.

  2. Priya says

    Meendum mayir. After you posted that sureshchandra fires from mersal by vijai, he don’t want to answer your call even, but you act like you know everything . Lolz.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய்… இல்லேன்னா பா.விஜய்! தேனாண்டாள் எடுத்த திடீர் முடிவு!

Close