விட்டு விலகாத பீப் பிரண்ட்ஸ்!
இப்படியெல்லாம் ஒரு சம்பவம் நடந்திருந்தால், ஏழு தலைமுறைக்கு நீயும் அவனும் சந்திச்சுக்கவே கூடாது என்றுதானே முதுகில் வெளுப்பார்கள்? ஆனால் அடிபட்ட ஏழாம் மாதமே வடு மறைஞ்சாச்சு போலிருக்கே! என்னய்யா என்ன?
ஒண்ணுமில்ல… அனிருத் இன்று ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறார். பாடலின் வரிகள் ‘தாறுமாறு தக்காளி சோறு…’
ஆமாம்… அதிலென்னய்யா பிரச்சனை? பாடலை பாடியவர் பீப் புகழ் சிம்புவாச்சே? அதைதான் தன் நட்பு கரங்களால் நாட்டு மக்களுக்கு அர்பணித்திருக்கிறது விரல் சூப்பும் குழந்தை அனிருத். வீர சிவாஜி படத்தில் இடம் பெற்றிருக்கிறது அந்தப் பாடல். படத்தின் இயக்குனர் கணேஷ்ராம், சிம்புவை வைத்து ஒரு படம் எடுத்து அதை தொடர முடியாமல் கைவிட்டவர். அதற்கப்புறம் தகராறு என்ற படத்தை இயக்கியவர்.
அவரும் சிம்புவும் நகமும், பாலிஷும் போல. அந்த நட்பில், என் படத்துக்கு நீங்க வந்து பாடணும் என்று கேட்க, கேட்ட மாத்திரத்தில் பாடிக் கொடுத்திருக்கிறார் சிம்பு. டி.இமான் மியூசிக்கில் பாட்டு ஆஹா ஓஹோ. அதை இன்னொரு துடிப்பான கரங்கள் வெளியிடுவதுதானே அழகு? தன் நம்பிக்கையை இன்னும் பலப்படுத்திக் கொண்டு அனிருத் வீட்டு கதவை தட்டினாராம் கணேஷ். பாடியவர் சிம்பு என்றதும் உடனடி அப்ரூவல் கிடைத்ததாம் அவரிடமிருந்து.
இந்த இனிய சந்தர்ப்பத்தில் சிம்புவையும் அனிருத்தையும் அருகருகே நிற்க வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டாராம் கணேஷ். ஆனால் நாட்டுல இருக்கிற பாதிப்பய புள்ளைங்க அது பற்றியே பேசி ஆவியை போக்கிக்குவாங்களே? அதனால்தான் அனிருத் மட்டும் சிங்கிளாக அமர்ந்து இந்த சிங்கிள் டிராக்கை ரிலீஸ் செய்திருக்கிறார்.