திக்கி திணறும் இசையமைப்பாளர்? கைகொடுக்கும் அனிருத்!

வாழ்க்கையே ஒரு அட்ஜஸ்ட்மென்ட்தான் போல! மேட்டை வெட்டி பள்ளத்தில் போடுவதும், பள்ளத்தை தோண்டி மேடாக்குவதுமாக ஏதாவது நடந்து கொண்டேயிருக்க வேண்டும். நாம் சொல்லப் போவதை கேட்டால் உங்களுக்கு வேடிக்கையாக கூட இருக்கும்!

ஒரு டைரக்டர் டன்டனக்கா என்ற ஒரு வார்த்தை எனக்கு மட்டுமே சொந்தம் என்கிறார். ‘அந்த வார்த்தையை சொன்னால் என் கட்சிக்காரர்தான் நினைவுக்கு வருவார். அப்படியிருக்கும் போது அவரிடம் பர்மிஷன் வாங்காமல் எப்படி பாடலாக்கினீர்கள்?’ இதுதான் அவரது வழக்கறிஞர் கேட்கும் கேள்வி. அதோடு விட்டார்களா? சம்பந்தப்பட்ட நிறுவனம், தனக்கு ஒரு கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்னும் கேட்டிருக்கிறார். வழக்கு நீதிமன்றத்தில் ஏற்கப்படுமா, அல்லது அதற்குள் ஏதாவது கொடுத்து(?) சால்வ் பண்ணி விடுவார்களா? அது இனிமேல்தான் தெரியவரப்போகும் கதை.

ஆனால் தெரியாத கதை ஒன்று. இவரது மகன் திடீர் இசையமைப்பாளர் ஆகிவிட்டார். மூன்று பாடல் கொடுத்தால் படம் முடிந்தது. ஆனால் அந்த மூன்று பாடல்களை போட்டுக் கொடுப்பதற்குள் முக்கி முனகுகிறாராம் அவர். பாட்டு எப்ப வரும்? பாட்டு எப்ப வரும்? என்று இயக்குனர் தொல்லை கொடுப்பதும், வந்தா கொடுக்க மாட்டேனா என்று திடீர் இசையமைப்பாளர் திருப்பி முறைப்பதுமாக போய் கொண்டிருக்கிறது பொழுது. இந்த நேரத்தில்தான் இந்த விஷயத்தில் திடீர் திருப்பம்.

அனிருத்திடம் உதவி கேட்டிருக்கிறாராம் அந்த இளம் அறிமுக இசையமைப்பாளர். அவரும் அந்த மூன்று ட்யூன்களுக்கு நான் பொறுப்பாச்சு என்று உதவி கரம் நீட்டியிருக்கிறாராம். ஒரு படத்திற்கே இந்த பாடு. இனி இவர் எப்படிதான் இசையமைப்பாளர் என்ற கோதாவோடு மிச்ச காலத்தையும் ஓட்டப் போகிறாரோ?

அதிருக்கட்டும்… அனிருத்துக்கு ஒரு சம்பளம் தர வேண்டுமல்லவா? அதற்காகதான் இப்படி அடுத்த கம்பெனியில் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்கிறார்களோ என்னவோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Thayum konja kalam – Kangaroo | Official Video Song | Sami | Thambiramaya | Srinivas | Sri Priyanka

https://youtu.be/yCqGoYzJWgU

Close